மத்திய அரசின் முயற்சியினால் அத்தியாவசிய பொருட்கள் விலை குறைவு!
சென்னையில் மத்திய அரசு முயற்சியில் காரணமாக அத்தியாவசியமான பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற பொருட்களின் விலை குறைப்பு.
By : Bharathi Latha
பண்டிகை நாட்களில் ஏழை, எளிய மக்களின் பயன்பெறும் வகையில் அத்தியாவசிய பொருட்களின் விடை குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தொடர் முயற்சியின் காரணமாக பண்டிகை நாட்களில் ஒட்டி அதிக அத்தியாவசிய பொருட்களான பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைகள் தற்போது குறைக்கப் பட்டுள்ளது. இதற்கு முன்பு கூட சென்னையில் அதிக அளவில் விற்று வந்த மாளிகை சாமான் பொருட்களின் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது என்பது மக்கள் மத்தியில் ஒரு நிறைவே ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை இது பற்றி தன்னுடைய அறிக்கையில் கூறுகையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு ஏழை, எளிய மக்களும் பயன்பெறும் வகையில் தற்பொழுது அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு எழுத தொடர் முயற்சிகளின் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
இதற்கு முன்பு இருந்த காலங்களில் எண்ணெய் மற்றும் பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்து இருந்தது இறக்குமதி வரி குறைத்த காரணத்தினால் இவை அனைத்து பொருட்களையும் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச சந்தைகளை பொருத்தவரை தற்போது எண்ணெய் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பொருட்களின் விலைகளும் தற்போது குறைக்கப்பட்டு உள்ளது.
Input & Image courtesy: Polimer News