Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க'வின் கூட்டத்திற்காக புதுக்கோட்டையில் மக்கள் வெள்ளத்தில் அண்ணாமலை

தி.மு.க ஆட்சியில் ஊழலுக்கு பஞ்சம் இல்லை என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

பா.ஜ.கவின் கூட்டத்திற்காக புதுக்கோட்டையில் மக்கள் வெள்ளத்தில் அண்ணாமலை
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  19 Aug 2022 2:21 PM IST

தி.மு.க ஆட்சியில் ஊழலுக்கு பஞ்சமில்லாமல் திரும்பும் எல்லா திசைகளிலும் ஊழல் குடி கொண்டு இருக்கின்றது என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், நேற்று நடந்த மக்கள் கூட்டத்தில் பல்வேறு மக்களின் ஆதரவுகளை பெற்று, சர்வாதிகாரத்தில் புதுக்கோட்டை கட்டலாம் என்று தமிழக முதல்வரின் மனக் கோட்டையை தகர்த்து கூடிய மக்கள் கூட்டம் புதுக்கோட்டை மாநகரம். கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.


தி.மு.க ஆட்சியில் ஊழலுக்கு குறைவில்லாமல், சர்வாதிகாரத்திற்கு எல்லை இல்லாமல், மக்களே பல்வேறு வகைகளில் அடிப்படை உரிமைகள் பெற முடியாத அளவிற்கு அவர்கள் ஆளாகி உள்ளார்கள். தமிழகத்திற்கு முன்னேற்றத்திற்கு வழி இல்லை என்பதை உணர்ந்து ஊழலற்ற ஆட்சி தரும் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமை ஏற்கக்கூடிய மக்களின் எழுச்சிக் கூட்டம் தான் தற்போது புதுக்கோட்டையில் கூடியுள்ள இந்தக் கூட்டம்.


புதுக்கோட்டை மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் மக்களின் பேராதரவுடன் நடைபெற்ற இந்த கூட்டம் தற்போது ஆளும் கட்சியின் மேல் மக்கள் நம்பிக்கை இல்லாதது மற்றும் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் என்றும் பா.ஜ.க கட்சி சார்பில் அவர் தெரிவித்துள்ளார்.

Input & Image courtesy: News 7

Next Story
கதிர் தொகுப்பு
Trending News