புரட்டாசி மகாளய அமாவாசை - கூட்ட நெரிசலை சமாளிக்க கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள்!
புரட்டாசி மகாளய அம்மாவாசை தினத்தில் கூட்டணி சமாளிக்க ராமேஸ்வரம் கோயிலில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.
By : Bharathi Latha
புரட்டாசி மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிக்க ராமேஸ்வரம் கோவிலில் முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அகில இந்திய புண்ணிய தளங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேஸ்வரம் ராமநாத கோவிலின் ஆடி, தை மற்றும் புரட்டாசி மாத மகாளய அம்மாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக இந்த நாட்களில் ராமேஸ்வரம் வந்து அக்னி தீர்த்த கடலில் நீராடி இறந்து போன தங்களது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் பூஜை செய்து வழிபட்டால் இறந்த முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டின் புரட்டாசி மாத மகாளய அமாவாசை இன்று நடைபெறுகிறது. இதனை ஒட்டி பல்வேறு பக்தர்கள் வருகை தரலாம் மற்றும் கூட்டத்தை சமாளிக்க ஏற்பாடுகளை நிர்வாகம் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதிக பக்தர்கள் இருக்கும் ராமேஸ்வரம் கோவிலின் உட்பகுதியில் மூன்று பிரகாரம், சுவாமி சன்னதி பிரகாரம், அம்மன் சன்னதி பிரகாரம் போன்ற பல இடங்களில் பக்தர்கள் வரிசையில் நின்று செல்லுமாக தடுப்பு கம்பிகளும் தற்போது கட்டப்பட்டுள்ளது.
வரிசையில் நின்று தீர்த்தம் ஆடச் செல்ல வசதிக்காக கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் இருந்து, வடக்கு கோபுர வாசல் வரையிலும் தடுப்பு கம்புகளும் கட்டப்பட்டுள்ளன. ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களை விட புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாள் அன்று திதி பூஜை செய்து வழிபடுவது மிகவும் உகந்த நாளாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy:News J