கோவில் கும்பாபிஷேக பணி: தூய்மைப்படுத்தப்படும் பழனி தங்க கோபுரம்!
கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் பழனி கோவிலில் தங்க கோபுரம் தூய்மைப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது.
By : Bharathi Latha
தமிழ் கடவுள் முருகனின் மூன்றாம் படைவீடாக பழனி திகழ்கிறது. தமிழகத்தில் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்கள் இருந்து கூட ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தருகிறார்கள். இங்கு கும்பாபிஷேகம் நடைபெற்று கடந்த 12 வருடங்கள் ஆகிவிட்டது. இதன் காரணமாக கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் உத்தரவின் பேரில் பழமையாக உள்ள கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் வருகின்ற ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கோவில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெளி கோபுரம், உட் கோபுரம், கல் தூண்கள் ஆகியவை பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட இருக்கிறது. மேலும் கோவில் சுவர்களில் உள்ள சுதைகள் வர்ணம் பூச்சி செய்யப்பட்ட புதிதாக மாற்றப்பட்டுள்ளன. புதிய பித்தளை கம்பிகள் நிறுவும் பணி மற்றும் கல் தூண்கள் அகற்றில் புதிய தூண்கள் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கோவில்களில் ஆகம விதிப்படி பாலாறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மலைக்கோவில் உங்கள் சன்னதிக்க மேல் உள்ள தங்க கோபுரத்தை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. சிறப்பு பூசைகள் நடத்தப்பட்டு தங்கம் சரி செய்யும் பணியாளர்கள் கோவில் உதவியாளர் லட்சுமி முன்னிலையில் தங்க கோபுரத்தை ஆய்வு செய்தார்கள். கோபுரத்தில் உள்ள தூசிகள் பாசிகள் செய்தமடைந்த பகுதிகள் அகற்றப்பட்டு தங்கம் மூலம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்படும் என நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Input & Image courtesy: Maalaimalar News