Kathir News
Begin typing your search above and press return to search.

பேஸ்புக்கிடம் இருந்து 7 கோடி புதிய பயனாளர்களை அலேக்கா தூக்கிய டெலிகிராம்!

பேஸ்புக் குழும செயலிகள் கடந்த 4ம் தேதி இரவு 6 மணி நேரத்துக்கு முடங்கிய நிலையில், இந்திய செயலியான டெலிகிராம் 7 கோடி புதிய பயனாளர்களை இழுத்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. கடந்த 4ம் தேதி இரவு 6 மணி நேரத்துக்கு மேலாக பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் முடங்கியிருந்தது. இதனால் அதனை நம்பியிருந்த பயனாளர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். தகவல்களை பரிமாற முடியாமல் தினறி வந்தனர்.

பேஸ்புக்கிடம் இருந்து 7 கோடி புதிய பயனாளர்களை அலேக்கா தூக்கிய டெலிகிராம்!
X

ThangaveluBy : Thangavelu

  |  6 Oct 2021 9:31 AM GMT

பேஸ்புக் குழும செயலிகள் கடந்த 4ம் தேதி இரவு 6 மணி நேரத்துக்கு முடங்கிய நிலையில், இந்திய செயலியான டெலிகிராம் 7 கோடி புதிய பயனாளர்களை இழுத்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. கடந்த 4ம் தேதி இரவு 6 மணி நேரத்துக்கு மேலாக பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் முடங்கியிருந்தது. இதனால் அதனை நம்பியிருந்த பயனாளர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். தகவல்களை பரிமாற முடியாமல் தினறி வந்தனர்.

இதன் காரணமாக பேஸ்புக் குழும நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு 52 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்ததுடன் அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து 5வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதனிடையே, பேஸ்புக்க முடக்கத்தின்போது, ட்விட்டர் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகள் அதிகமாக பயனாளர்களால் உபயோகிக்கப்பட்டது. அதிலும் டெலிகிராம் 6 மணி நேர இடைவெளியில் 7 கோடி புதிய பயனாளர்களை தட்டி தூக்கியுள்ளது. இது பற்றி அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டெலிகிராம் நிறுவனர் பாவல் துரோவ் கூறும்போது, இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான புதிய பயனாளிகள் அந்த நேரத்தில் எங்களுக்கு கிடைத்துள்ளனர். மேலும், பழைய பயனாளர்களும் எங்கள் செயலியை அதிகமாக பயன்படுத்தினர். திடீர் புதிய பயனர்கள் வரவை எங்கள் ஊழியர்கள் மிகவும் சாமர்த்தியமாக கையாண்டனர். இது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் எனவும் கூறினார்.

Source: Puthiyathalamurai

Image Courtesy:Sada El Balad

Next Story
கதிர் தொகுப்பு
Trending News