லைசின் நிறைந்த உணவுகள் முக்கியத்துவம் பெறுவது எதற்கு?
What are the reason to need for lysine food in our body?
By : Bharathi Latha
லைசின் என்பது ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களில் ஒன்றாகும் மற்றும் புரதங்களின் கட்டுமான அமைப்புக்கு மிகவும் அவசியமான ஒன்று. லைசின் எனும் அமினோ அமிலத்தை உடலால் உற்பத்தி செய்ய முடியாது என்பதால் இதை வெளிப்புறமாக லைசின் நிறைந்த உணவுகளை நாம் கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும். அப்படி உணவுகளின் வாயிலாக நாம் எடுத்துக்கொள்ளும்போது நம் உடல் அதை உறிஞ்சிக்கொள்ளும். இந்த லைசின் அமினோ அமிலம் இறைச்சி, மீன், முட்டை போன்ற புரத அடிப்படையிலான உணவுகள், பீன்ஸ் போன்ற தாவர அடிப்படையிலான உணவுகளில் காணப்படுகிறது.
லைசின் நிறைந்த உணவுகளை எலும்புகள் மற்றும் தோல் போன்ற இணைப்பு திசுக்களில் கொலாஜன் ஒரு முக்கிய அங்கமாகும் மற்றும் காயங்களைக் குணப்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. காயங்கள் ஏற்பட்ட இடத்தில் கொலாஜன் உற்பத்திக்கு லைசின் உதவுகிறது மற்றும் காயங்களை ஆற்றும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. இது காயத்தில் புதிய உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது மற்றும் புதிய இரத்த நாளங்களை உருவாக்க உதவுகிறது.உதவுகிறது பனிக்காலத்தில் உதடுகளில் அல்லது வாயைச் சுற்றி ஏற்படும் புண்களால் மிகுந்த வலி ஏற்படும் மற்றும் அடிக்கடி எரிச்சல், வலி உணர்வு உண்டாகும். 50 ஆரோக்கியமான நபர்களிடம் நடத்தப்பட்ட ஒரு வார ஆய்வில், லைசின் மற்றும் அர்ஜினைன் ஆகியவை மன அழுத்தத்திற்கு காரணமாக இருக்கும் ஏற்பிகளைத் தடுக்க உதவியது கண்டறியப்பட்டது.
இதனால் மன அழுத்த ஹார்மோன் கார்டிசோலின் அளவைக் கணிசமாகக் குறைக்க முடியும். இதற்கான ஆராய்ச்சிகள் தற்போது ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், லைசின் ஸ்கிசோபெர்னியாவை மேம்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது என்று நம்பப்படுகிறது. மனநல பிரச்சினைகளை குணப்படுத்த லைசின் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.லைசின் உடலுக்கு கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுவது மட்டுமல்லாமல், சிறுநீரகங்கள் தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது, இதனால் சிறுநீரில் கால்சியம் இழப்பின் அளவைக் குறைக்கிறது. எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க லைசின் உதவுகிறது மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நிலைகளை குணப்படுத்த உதவுகிறது
Input & Image courtesy:Medicalnewstoday