Kathir News
Begin typing your search above and press return to search.

நாடா அது? சீனாவை விட்டு முற்றிலுமாக வெளியேறுவதாக அறிவித்த யாஹு நிறுவனம்! ஏற்கனவே முந்திக்கொண்ட மைக்ரோசாப்ட்!

சீனா அரசு தற்போது பெரும் நிறுவனங்களுக்கு பல்வேறு சட்டங்களை விதித்துள்ளது.

நாடா அது? சீனாவை விட்டு முற்றிலுமாக  வெளியேறுவதாக அறிவித்த யாஹு நிறுவனம்! ஏற்கனவே முந்திக்கொண்ட மைக்ரோசாப்ட்!

MuruganandhamBy : Muruganandham

  |  4 Nov 2021 3:07 AM GMT

'Yahoo' நிறுவனம் சீனாவில் இருந்து முற்றிலுமாக வெளியேறி உள்ளது. அந்நாட்டு அரசு தற்போது பன்னாட்டு நிறுவனங்களுக்கு பல்வேறு சட்டங்களை விதித்துள்ளது. இதனால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் அதிருப்தியில் வெளியேறி வருகின்றன.

கடந்த மாதம் சீனாவிலிருந்து அமெரிக்காவின் 'மைக்ரோ சாப்ட்' நிறுவனம் தனது லிங்க்ட் இன் சேவையை நிறுத்தியது. தற்போது இரண்டாவது நிறுவனமாக 'Yahoo' சீனாவில் இருந்து வெளியேறி உள்ளது. அந்நாட்டு அரசின் நடவடிக்கைகள் பெரும் நிறுவனங்களுக்கு எதிராக உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனமான 'யாகூ' சீனாவில் தற்போது நிலவும் சட்ட ரீதியிலான நெருக்கடி காரணமாக , முற்றிலும் வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தனது சேவையை சீனாவில் உள்ள பயனாளர்களுக்கு நிறுத்தி விட்டது.

இதுகுறித்து அந்நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், சீனாவில் தொழில் செய்ய சவாலான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு நிலவும் சிக்கலான சட்டநிலை காரணமாக எங்களது அனைத்து சேவைகளும் கடந்த நவம்பர் 1-ந் தேதி முதல் சீனாவில் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

யாஹூ நிறுவனம் பயனாளர்களின் உரிமைகள் இலவச மற்றும் திறந்த இணையம் ஆகியவற்றில் எப்போதும் உறுதியாக உள்ளது. இதுவரை சீனாவில் எங்களுக்கு ஆதரவு அளித்த வர்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளது.









Next Story
கதிர் தொகுப்பு
Trending News