பிரிட்டனில் 2வது முறையும் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளி: யார் இவர்?
பிரிட்டனில் இரண்டாவது முறையாகவும் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளி சுனில் சோப்ரா.
By : Bharathi Latha
இந்திய வம்சாவளியான தொழில் அதிபர் சுனில் சோப்ரா அவர்கள் பிரிட்டனில் மேயராக தற்போது இரண்டாவது முறையாக தேர்வாகியுள்ளார். இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக லண்டனில் வசித்து வரும் வருகிறார். மேலும் 1979ஆம் ஆண்டில் இங்கிலாந்து இருக்கக்கூடிய இறந்த பிறகு சோப்ரா ஒரு சிறிய கடையில் தொடங்கினார். பிரிட்டன் தலைநகரின் பாரோ ஆஃப் சவுத்வார்க் என்ற மாகாணத்தின் மேயராக இரண்டாவது முறை பதவி வகிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2014-2015-ம் ஆண்டின் மேயராகவும், 2013-2014-ம் ஆண்டின் துணை மேயராகவும் பதவி வகித்தவர். இந்த மாகாணத்தின் முதல் இந்திய வம்சாவளி மேயர் இவர்தான். இரண்டு சதவிகித இந்திய வம்சாவளியினர் மட்டுமே வசிக்கும் ஒரு தொகுதியில் இவர் வெற்றிபெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் 2010ஆம் ஆண்டில் இருந்து அரசியலில் ஈடுபட தொடங்கியுள்ளார். மேலும் பல்வேறு தொகுதிகளில் வெற்றி பெரும் பங்கு வகித்து உள்ளார். பல ஆண்டுகளாக லிபரல் கட்சியின் வசமிருந்த தொகுதியினை தற்போது இவர் கைப்பற்றியுள்ளார்.
குடி பெயர்ந்த பொழுது சிறிய ஆடை கடையைத் துவங்கிய இவர் இதர தயாரிப்புகளும் மொத்த விலைக்கு விற்பனை செய்யும் வணிக நிறுவனமாக தற்போது வளர்ந்து உள்ளார். இதனை ஒரு பழக்கமாக வைத்துக் கொண்டாலும் அரசியலிலும் இவர் முழுமூச்சாக ஈடுபட்டு உள்ளார். மேலும் இங்கிலாந்திலும் உள்ளூர் சமூக பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக இவர் அங்கு ஓட்டுகளின் எண்ணிக்கையும் அதிகமாக கிடைத்ததற்கு முக்கிய காரணமாகவும் கூறப்படுகிறது.
Input & Image courtesy:Vikatan News