Kathir News
Begin typing your search above and press return to search.

டைட்டானிக் கப்பலின் தற்போதைய நிலைமை - பிரமிப்பை ஏற்படுத்தும் எச்சங்கள்!

110 ஆண்டுகளுக்குப் பிறகு டைட்டானிக் கப்பலில் தற்போதைய நிலைமைகள்.

டைட்டானிக் கப்பலின் தற்போதைய நிலைமை -  பிரமிப்பை ஏற்படுத்தும் எச்சங்கள்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 Sep 2022 2:52 AM GMT

110 ஆண்டுகளுக்குப் பிறகு வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் பனிப்பாறையில் மோதி விபத்துக்கு உள்ளான டைட்டானிக் கப்பலின் தற்போதைய நிலைமைகள் பற்றிய வீடியோ வழியாக சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகின்றது. குறிப்பாக எடுக்கப்பட்ட இந்த வீடியோவானது 8K HD தரத்தில் வெளியாக்கி பார்ப்பவரை அப்படியே அந்த தத்துரூபா காட்சிகளை நினைவுக்கு கொண்டு வருகின்றது.1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 மற்றும் 15ஆம் தேதி இரவுகளின் நடைபெற்ற மிகப்பெரிய விபத்து காரணமாக இந்த கப்பல் கடலில் மூழ்கியது.


இரவு நேரத்தில் புறப்பட்ட இந்த கப்பல் 3 மணி நேரத்தில் பனிப்பாறையின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த கப்பலில் பயணம் செய்த 1500க்கும் மேற்பட்ட பயணிகள் பரிதாபமாக உயிர் உள்ளார்கள். இந்த சம்பவம் நடந்து 110 ஆண்டுகளுக்குப் பிறகும் கடலில் நடந்த மிகப்பெரிய பனிப்பாறை தாக்குதலாக இந்த ஒரு டைட்டானிக் கப்பலின் தாக்குதல் இருந்து வருகின்றது. மேலும் இது பற்றி வெளியாக்கிய திரைப்படமும் பல்வேறு மக்களின் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.


தற்போது சர்வதேச நீர்மூழ்கி வீரர்களும் அவ்வப்பொழுது அந்த பகுதியில் நீர் மூழ்கி சர்வதேச சாதனை புரிந்து கப்பலின் தற்போதைய நிலைமை பற்றிய வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்கள். குறிப்பாக 200 பவுண்டு எடை கொண்ட நங்கூரம், அந்தக் கப்பலின் பிரம்மாண்ட தலங்கள் ஆகியவை தற்போது பாழடைந்து இருக்கின்றது இருந்தாலும் அந்த வீடியோவை காண்பவர் மனதில் மிகவும் பிரம்மாண்டத்தை ஏற்படுத்துகிறது.

Input & Image courtesy: Polimer News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News