Kathir News
Begin typing your search above and press return to search.

"நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது, சாக்கு சொல்லவே தி.மு.க குழு" - எல்.முருகன் பாய்ச்சல்!

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது, சாக்கு சொல்லவே தி.மு.க குழு - எல்.முருகன் பாய்ச்சல்!
X

ParthasarathyBy : Parthasarathy

  |  4 July 2021 2:04 AM GMT

தமிழக பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி சட்டமன்ற தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் எல். முருகனும் உடன் இருந்து பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.


இந்த சந்திப்பு முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் எல்.முருகன் பேசுகையில் "நீர் சேமிப்பு மற்றும் நதிகள் இணைப்பு குறித்தும் பிரதமரிடம் வலியுறுத்தினோம். மாமல்லபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட சுற்றுலா இடங்களை மேம்படுத்த பிரதமரிடம் கூறினோம். காவிரி விவகாரத்தில் தமிழகம் மற்றும் தமிழக மக்கள் நலனுக்கு பா.ஜ.க என்றும் துணை நிற்கும்.


உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, நீட் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. நீட் தேர்வை நிறுத்த முடியாது என தெரிந்தும் தி.மு.க நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு, பொய் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றி தற்போது ஆட்சியை பிடித்துள்ளது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய, குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பதால், சாக்கு போக்கு சொல்ல தி.மு.க அரசு இந்த குழுவை அமைத்துள்ளது. மேலும் நீட் தேர்வின் சாதகங்கள் குறித்து தமிழக அரசு அமைத்த குழு பரிசீலனை செய்யவில்லை. இந்த நீட் தேர்வால் இதுவரை 400-க்கும் மேற்பட்ட ஏழை மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர்." என்று கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News