Begin typing your search above and press return to search.
கரூரில் போடாத சாலைக்கு கணக்கு காட்டி முறைகேடு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார் மனு!

By :
கரூர் மாவட்டத்தில் போடாத சாலைக்கு கணக்கு காட்டி முறைகேடு நடந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரபரப்பான புகார் மனு அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது: கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் நடந்து முறைகேடு சம்பந்தமாக கடந்த 5ம் தேதி நானும் எங்களது கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி நிரதிநிதிகளுடன் சென்று சாலைகளை பார்வையிட்டோம், அதன் பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் அளிக்க சென்றபோது அவர் எங்களை நிராகரித்தார்.
அதன் பின்னர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியிடம் மனு கொடுத்துவிட்டு சென்னைக்கு சென்றுவிட்டேன். போடாத சாலைக்கு கணக்கு காட்டி ரூ.3 கோடி அளவில் முறைகேட்டில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Thamarai Tv
Next Story