"குடும்ப அரசியல் கொள்ளைக்கு சமம்" - முழு வீரியத்துடன் தென்னிந்தியாவில் இறங்கிய பிரதமர் மோடி
By : Thangavelu
நாட்டை கொள்ளை அடிப்பதிலேயே ஒரு குடும்பத்தினர் அரசியல் கட்சி நடத்தி வருகின்றனர் என்று தெலங்கானா ராஷ்ட்டிரிய சமீதி கட்சியின் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மீது பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்திற்கு வருகை தருவதற்கு முன்னர் பிரதமர் மோடி தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது: தற்போதைய நிலையில் தெலங்கானா அரசு ஊழலில் திளைத்து வருகிறது. இங்கிருக்கும் ஆட்சியாளர்கள் அவரவர் வங்கி கணக்கை நிரப்பினால் போதும் என்கின்ற நிலையில் பணியாற்றுகின்றனர்.
எனவே ஒரு குடும்பத்தின் கையில் ஆட்சி நிர்வாகம் சிக்கி தவித்து வருகிறது. இதனால் நாட்டை கொள்ளை அடிப்பதற்காகவே ஒரு குடும்பத்தினர் அரசியல் நடத்தி வருகின்றனர். இது போன்ற ஆட்சி ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய எதிரானது. இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் பறிபோயுள்ளது. வாரிசு அரசியலால் நாட்டின் வளர்ச்சி கெட்டுவிட்டது. அவர்களின் முன்னேற்றத்திற்கு மட்டுமே பாடுகின்றனர் என்றார். தமிழகம் வருவதற்கு முன்னதாகவே பிரதமர் மோடி வாரிசு அரசியலால் நாட்டிற்கு பேராபத்து என்று பேசியுள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் தி.மு.க. அரசு ஆட்சி அமைத்துள்ளது. அப்பா முதலமைச்சர் மகன், எம்.எல்.ஏ., சகோதரி எம்.பி., என்று பல்வேறு பொறுப்புகளை ஆக்கிரமித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Dinamalar