Kathir News
Begin typing your search above and press return to search.

ரேபரேலி உட்பட 85 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பா.ஜ.க.!

ரேபரேலி உட்பட 85 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பா.ஜ.க.!

ThangaveluBy : Thangavelu

  |  22 Jan 2022 3:48 AM GMT

உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள மேலும் 85 வேட்பாளர்களின் பெயர்களை பாஜக அறிவித்துள்ளது.

இதில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவில் சேர்ந்த அதிதி சிங் மற்றும் ராகேஷ் சிங் ஆகியோருக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சோனியா காந்தி எம்.பி.யாக உள்ள ரேபரேலியில் அமைந்துள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐபிஎஸ் அதிகாரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு சமீபத்தில் பாஜகவில் இணைந்த ஆசிம் அருணுக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 195 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Puthiyathalaimurai

Image Courtesy:The New Indian Express

Next Story
கதிர் தொகுப்பு
Trending News