'பிரிவினைவாத கருத்துக்கள் தி.மு.க அரசின் சார்பில் முன்வைக்கப்படுகிறது' - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
By : Thangavelu
சென்னை, மியூசிக் அகாடமியில் துக்ளக் வார இதழின் 52வது ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அண்ணாமலை, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: அதிகமான வரியை செலுத்துவதால் தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்களை கொடுக்க வேண்டும் என்று தி.மு.க. அரசின் சார்பாக முன்வைக்கப்படுகின்ற கருத்துக்கள் அனைத்தும் பிரிவினைவாத எண்ணம் உடையவர்களின் கருத்தாகவே எண்ண முடியும்.
மேலும், திராவிட இயக்கம் இந்தி கற்றுக்கொள்ளும் தனிமனித உரிமையை பறித்து விட்டது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையில் சுமுக உறவு இல்லை என்று பொய்யான பிரச்சாரம் செய்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் பா.ஜ.க. அமோக வளர்ச்சி பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Source: News 18 Tamilnadu
Image Courtesy: Twiter