குத்தக முறையில் அலுவலக பணியாளர்களா? ஸ்டாலினுக்கு ராமதாஸ் கண்டனம்!
அலுவலகப் பணியாளர்களை குத்தகை முறையில் நியமிப்பதாக தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்.
By : Bharathi Latha
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழக அரசுக்கு எதிரான தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறார். குறிப்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தொழில்நுட்பம் மற்றும் அலுவலகப் பணியாளர்களை குத்தகை முறையில் நியமிக்க உயர் கல்வித் துறை தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. பணியாளர்களின் உரிமைகளை பறித்து அவர்களை கொத்தடிமகளாக்கும் புதிய பணி நியமனமுறையை கண்டிக்கத்தக்கதாகும்.
அண்ணா பல்கலைக்கழக மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக உள்ளிட்ட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றும் தற்காலிக பணியாளர்கள் தகுதி குறைந்தவர்கள் அல்ல, திறமை மிக்கவர்கள். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் 10 ஆண்டுகளின் முதல் 20 ஆண்டுகள் வரை இவர்கள் குறைந்தபட்ச ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களை பணி நிரந்தர செய்யப்பட்டால் அவர்களின் குடும்பங்கள் வீதிக்கு வந்துவிடும்.
எனவே பல்கலைக்கழகங்களிலும் பிற அரசு துறைகளிலும் அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறையில் பணியாளர்களை நியமிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். அவுட்சோர்சிங் செய்யப்படக்கூடாது என்பதை தமிழக அரசு கொள்கையாகவே முடிவெடுக்க வேண்டும். அனைத்து பல்கலைக்கழகங்களும் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: News