புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு சிலை!
மணக்குள விநாயகர் கோவிலில் யானை லட்சுமி இறந்ததை தொடர்ந்து அதற்கு சிலை வைக்க பொதுமக்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.
By : Bharathi Latha
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் யானை லட்சுமி கடந்த 29ஆம் தேதி மிஷன் வீதியில் கலவை கல்லூரி மேல்நிலைப்பள்ளி அருகே நடை பயிற்சி சென்ற பொழுது திடீரென மயங்கி விழுந்தது. மயங்கி விழுந்த சிறிது நிலை நேரத்திலேயே அது இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் யானை லட்சுமியின் இறுதி சடங்கின்போது ஏராளமான புதுச்சேரி மக்கள் கண்ணீருடன் யானை லட்சுமியை வழி அனுப்பி வைத்தார்கள்.
யானை இறந்த இடத்தில் பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று இரவு அங்கு திடீரென 2 அடி உயரத்தில் யானையின் கற்சிலை வைத்து பொதுமக்கள் சிறப்பு பூஜை நடத்தினர். மேலும் இது பற்றி தகவல் அறிந்த போலீசார் வண்டு சிலையை உடனடியாக அகற்ற வேண்டும் அனுமதி இன்றி இப்படி சிலை வைக்கக் கூடாது என்று கூறுகிறார்கள்.
பிறகு பொதுமக்கள் சார்பில் மூன்று அடி உயர பீடமும், அதன் மேல் இரண்டு அடி உயரத்திற்கு சாய்ந்த லட்சுமி யானையின் சிலை உருவமும் வைப்பதற்காக பொதுமக்கள் அனுமதி வாங்கி இருக்கிறார்கள். மேலும் உயிரிழந்த யானையின் நினைவாக இந்த சிலை அது இறந்த இடத்தில் பதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதற்கு புதுச்சேரி மக்கள் புதுச்சேரியின் செல்ல மகள் என்று கூப்பிடுகிறார்களாம்.
Input & Image courtesy: Thanthi News