புதுச்சேரி: உறுதியான பாலம் அமைக்க நவீன கருவி கொண்டு ஆய்வு!
புதுச்சேரி சந்திப்பில் பாலம் அமைக்க நவீன கருவி கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
By : Bharathi Latha
மரப்பாலும் சந்திப்பில் பாலங்கள் அமைக்க நவீன கருவி கொண்டு நேற்று ஆய்வு தொடங்கப்பட்டது. போக்குவரத்து நெருக்கடி காரணமாக மரப்பாலம் சந்திப்பு பகுதி நாள்தோறும் போக்குவரத்தின் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலூர், சிதம்பரம், கும்பகோணம், வேளாங்கண்ணி போன்ற ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த சந்திப்பை கடந்து தான் செல்ல வேண்டும். பல்வேறு வாகனங்கள் கடப்பதன் காரணமாக உறுதியான பாலத்தை அமைப்பதற்கு தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதுவையில் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் நகர் பகுதிக்கு இந்த சாலையை பயன்படுத்தி தான் வர வேண்டும். இதனால் காலை, மாலை மற்றும் முக்கியமான நேரங்களில் இந்த சாலை கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது மேம்பாலம். எனவே மரப்பாலம் சந்திப்பு மேம்படுத்தி ஆரியங்குப்பம் பாலம் வரை சாலையை அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர இந்திரா காந்தி ராஜீவ் காந்தி, சதுரங்களின் மேம்பாலம் கட்ட தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வேலைகளும் நடந்து வருகின்றது. மரப்பாலம் சந்திப்பிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேம்பாலம் கட்ட தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆரம்ப கட்ட பணிகளும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது முதற்கட்டமாக இந்த வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை மற்றும் அவற்றை சுமந்து செல்லும் இடைகளின் எண்ணிக்கை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவீன கருவி மூலமாக பெங்களூரைச் சேர்ந்த தனியார் தொழில் நிறுவனம் திட்ட அறிக்கையை தயாரிக்க உள்ளது..அதிகபட்சமாக சுமார் 20 முதல் 30 டன் எடை கொண்ட வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து செல்வதாகவும் கூறப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றார் வகையில நவீன கட்டடங்கள் கட்டமைப்புகளுடன் பாலம் கட்டப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Input & Image courtesy: News