Kathir News
Begin typing your search above and press return to search.

இடது பக்க போக்குவரத்து விதிகளை பின்பற்ற காரணம் என்ன ?

சில நாடுகளில் இன்னமும் இடதுபக்க போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதற்கான காரணம்.

இடது பக்க போக்குவரத்து விதிகளை பின்பற்ற காரணம் என்ன ?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  25 Nov 2021 1:36 PM GMT

சாலையில் வாகனங்களின் சீரான இயக்கத்தை உறுதிப்படுத்த உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் ஒரே மாதிரியான போக்குவரத்து விதிகள் அதாவது வலது கை போக்குவரத்து விதி பின்பற்றப்பட்டு வருகிறது. எனினும் இந்தியா உள்ளிட்ட சுமார் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் இடது கை போக்குவரத்து விதி தான் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த சாலை விதியின் மூலம் பல நாடுகளில் சாலையின் வலது பக்கம் வாகனங்களை இயக்கும் பெரும்பான்மை நாட்டினரை போல இல்லாமல், நடப்பது மற்றும் வாகனம் ஓட்டுவது என இடது பக்கத்தில் தான் சாலை விதிகளை பின்பற்றி வருகிறார்கள்.


குறிப்பாக பண்டைய கால வாள்வீரர்களில் பெரும்பாலானோர் வலது கை பழக்கம் கொண்டவர்கள் என்பதால் தங்களது வாள் அல்லது பிற ஆயுதங்களை இடது பக்கமாக பாதுகாத்தனர். இது எதிரிகளின் திடீர் தாக்குதலை சமாளிக்க அவர்களுக்கு உதவியது. எனவே வாள்வீரர்கள் பெரும்பாலும் சாலையின் இடதுபுறத்தில் பயணம் செய்தனர். மற்றொரு காரணம் என்னவென்றால், பழைய காலத்திலிருந்தே உள்ளது குதிரை சவாரி. குதிரை வீரர்கள் இடது பக்கத்திலிருந்து குதிரையின் மீதேறுவதை வசதியாக கருதினர். எனவே குதிரை சவாரி செய்பவர்கள் இடது பக்கம் மட்டுமே சவாரி செய்ய வேண்டும் என்ற விதி ஒருகாலத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்தது.


உலகளவில் சுமார் 65% மக்கள் வலதுகை போக்குவரத்து விதியை பின்பற்றி சாலையின் வலப்பக்கம் தங்கள் வாகனத்தை இயக்கி வரும் நிலையில், உலக தரநிலை வெப்சைட்டின் படி, உலக மக்கள் தொகையில் சுமார் 35% பேர் சாலையின் இடதுபுறம் வாகனத்தை ஓட்டுகிறார்கள். இப்படி இடது கை போக்குவரத்து விதியை பின்பற்றி வரும் பெரும்பாலான நாடுகள் ஆங்கிலேயர் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த பழைய பிரிட்டிஷ் காலனி நாடுகள் ஆகும். இடது கை போக்குவரத்தைப் பின்பற்றும் இந்த நடைமுறை பிரிட்டிஷ் காலத்தில் இருந்து வந்துள்ளது. இந்த விசித்திர நடைமுறைக்கு மேலும் சில கடந்த கால காரணங்களும் உள்ளன. அனைத்தும் சாலையின் இடது பக்கத்தில் வாகனம் ஓட்டுவதற்கான விதிகளுக்கு வழிவகுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Input & Image courtesy: News 18


Next Story
கதிர் தொகுப்பு
Trending News