இமயமலையில் 13 ஆயிரம் அடி உயரம் - எட்டிய முதல் ஆட்டிசம் பாதித்த கோவை சிறுவன்!
இமயமலையில் 13,000 அடி உயரம் ஏறி சாதனை படைத்து இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த முதல் ஆட்டிசம் பாதித்த சிறுவன்.
By : Bharathi Latha
கோயம்புத்தூர் மாவட்ட வேடப்பட்டி நகரைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி மற்றும் வினய கஸ்தூரி அவர்களின் தம்பதியின் மகனாக யத்தீந்திரா என்ற சிறுவன் இமயமலைத் தொடரில் 13 ஆயிரம் அடி உயரத்தை எட்டிய முதல் சிறுவன் என்ற பட்டத்தை பெற்றுள்ளார். ஆட்டிஸம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டதை 2வது வயதில் அறிந்த பெற்றோர், அவருக்கு யோகா, கராத்தே, நீச்சல் பயிற்சிகளை கற்றுக்கொடுத்து வந்துள்ளனர். மேலும் இதன் ஒரு பகுதியாக இமயமலைப் பகுதிகளில் வழக்கமாக ட்ராக்கில் செல்லும் தன்னுடைய குடும்ப நண்பர் ஒருவருடன் தனது மகளை மலையேற்ற பயிற்சி வைத்திருக்கும் பெற்றோர்கள் அனுப்பி வைத்தார்கள்.
மேலும் இதன் காரணமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் இவை மலைத்தொடரின் ஒரு பகுதியான 28000 அடி கொண்ட பியாஸ் குண்ட் மலையில் ஏறத் தொடங்கிய சிறுவன் யத்தீந்திரா, 4 நாள்களில் சுமார் 13 ஆயிரம் அடி உயரத்தை எட்டி அங்கு தேசியக் கொடியை அசைத்து, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். எனவே இமயமலை தொழில்களில் மலையேற்றப் பயிற்சி பெற்றுக்கொண்டு 13,000 அடியை கடந்த ஆட்டிசம் பாதிக்கப்பட்ட முதல் சிறுவன் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலமாக சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார் மேலும் அந்த சிறுவனுக்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளார்கள் இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிறுவனின் தாயார், "சிறு வயதிலிருந்தே மூளை வளர்ச்சி பாதிப்படைந்தவர். ஆனாலும் சிறுவயதிலேயே நீச்சல் பயிற்சி, கராத்தே உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுத்து வந்தோம். மேலும் யத்தீந்திரா மலை ஏறுவதற்கான பயிற்சிகளை எடுத்து வந்தார். 13 ஆயிரம் அடி உயரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். இதுபோன்ற குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஊக்கத்தை அளித்து தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று " அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
Input & Image courtesy:Thanthi News