காரில் கட்டி தெரு நாயை இழுத்துச் சென்ற மருத்துவர் - காவல் துறையினர் வழக்கு பதிவு!
நாயை காரில் கட்டி நீண்ட தூரம் இழுத்துச் சென்று மருத்துவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளது.
By : Bharathi Latha
ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர் மாவட்டத்தில் ரஜ்னீஷ் கால்வா என்ற மிகவும் பிரபலமான ஒரு மருத்துவர் தான் தனது காரில் நாய் ஒன்றை கயிறு கட்டி இழுத்து சென்றார். இது குறித்து பின்னால் வந்துள்ள ஓட்டுனர் உரிமம் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவியது. பின்னர் தான் இவர் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது. நாய் ஒன்றை இவர் நீண்ட தூரமாக கயிறு கட்டி வண்டியின் பின்னால் இழுத்துச் சென்றுள்ளார்.
இதனை பார்த்த சாலையில் நின்ற பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்தார்கள். பின்னர் நாய் குட்டியை பத்திரமாக மீட்டு காயமடைந்த நாயை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இது குறித்து விலங்குகள் நல அறக்கட்டளை அளித்த புகாரின் பெயரில் அந்த மருத்துவரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மிருகவதை தடைச் சட்டத்தின் கீழ் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மருத்துவர் கூறுகையில், தனது வீட்டு அருகில் இருந்த இந்த தெரு நாயை அப்புறப்படுத்த முயற்சியில் தான் இது போன்ற செய்ததாகவும் கூறியுள்ளார். பிரதான சாலையில் நாயை காரில் இழுத்து சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Input & Image courtesy: News