கேரளத்தில் அதிகரித்த தெரு நாய்கள் தொல்லை - துப்பாக்கி ஏந்தி சென்றவரை தூக்கி உள்ளே வைத்த போலீஸ்!
தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பின் காரணமாக மாணவிகளுக்கு துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புக்கு சென்றவர் கைது.
By : Bharathi Latha
கேரளாவில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தெருவில் அலைந்து திரியும் நாய்களின் கூட்டம் சிறுவர் முதல் பெரியவர் வரை யாரையும் விட்டு வைப்பது இல்லை. இந்த ஆண்டு இதுவரை நாய்கள் கடித்து 21 பேர் பலியான அதிர்ச்சி தகவலும் கேரளாவில் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக பல்வேறு மக்களும் வீதிகளில் நடப்பதற்கு கூட தயக்கம் காட்டி வருகிறார்கள்.
மேலும் குழந்தைகள் குறிப்பாக மற்றொரு இடங்களுக்கு செல்வதற்கு பாதுகாப்பும் தேவைப்படும் வருகின்றது. அந்த வகையில் சில பகுதிகளில் நாய்கள் கொடூரமாக கொன்று தூக்கிலிடும் சம்பவங்களும் நடந்தேறி வருகிறது. இதற்கிடையே நாய்களை கொல்வதற்கும், அவைகளை துன்புறுத்துவதற்கும் தண்டனைக்குரிய குற்றம் என்று மாநில போலீஸ் டி.ஜி.பி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நிலையில் நேற்று முன்தினம் காசர்கோட்டில் பள்ளிக்கு செல்லும் மாணவிகளுக்கு ஒரு சிறுமியின் தந்தை துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு கொடுத்துள்ளார்.
அந்த சிறுமி மற்றும் அவருடைய தோழிகள் பாதுகாப்பிற்காக அவர் அத்தகைய செயல்களில் ஈடுபட்டு உள்ளார். 50 வயதான சமீர் என்பவர் தான் தன்னுடைய கையில் துப்பாக்கியை ஏந்தி பாதுகாப்பு சென்றார். இந்த ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. அதனைத் தொடர்ந்து சமீரை லோக்கல் போலீஸ் சார் கைது செய்துள்ளார்கள். அவர் மீது பீதியை ஏற்படுத்தும் வகையிலான காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பரவியதாக பரவியதற்காக குற்றசாட்டும் முன்வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
Input & Image courtesy: Dinakaran news