பத்மநாபபுரம் கோட்டை சுவர் இடிந்து விழுந்து வீடுகள் சேதம்: கண்டு கொள்ளாத அதிகாரிகள் !
பத்மநாபபுரம் கோட்டை சுவர் இடிந்து விழுந்த சில வீடுகள் சேதம், நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள்.
By : Bharathi Latha
மர வேலைப்பாடுகள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட சுவரோவியங்களால் நிரம்பிய கி.பி 16 ஆம் நூற்றாண்டின் அதிசயம், பத்மநாபபுரம் அரண்மனை மலையடிவாரத்தில் உயர்ந்து நிற்கிறது. இப்பகுதியை ஆண்ட வேணாடு மற்றும் திருவிதாங்கூர் மன்னர்களின் வீரம் மற்றும் வலிமை ஆகியவற்றை எடுத்துச் சொல்லும் விதமாக இந்த கோட்டை சிறந்து விளங்குகிறது. இந்த கோட்டை கேரளா மற்றும் தமிழ்நாடு இரண்டிற்கும் பொதுவாக காணப்படுகின்றது. பராமரிப்பு பணிகளை கேரளா மற்றும் தமிழகத்தில் அரசாங்கம் முன்னர் மேற்கொண்டு வந்தனர். ஆனால் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, கருத்தில் கொள்ளாத அதிகாரிகள் அலட்சியத்தால் இந்து போட்டு முற்றிலுமாக பராமரிப்பு இன்றி காணப்பட்டது. இதனால் கோட்டையை சுற்றிலும் உள்ள கோட்டை கற்கள் மற்றும் லேட்டரைட் செங்கற்கள் வெளியே வந்து, விரிசல்களில் இருந்து செடிகள் வளர்ந்து உள்ளதால் இந்த சுவர் பலம் இழந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இதனால் தற்போது சமீபத்தில் இடிந்து விழுந்த பத்மநாபபுரம் கோட்டையின் ஒரு பகுதி கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையின் நாகர்கோவில் பிரிவு கன்வீனர் R. S. மோகனிடம் இதுபற்றி கேட்கும் போது, பத்மநாபபுரம் கோட்டையில் வருந்தத்தக்க நிலைக்கு தமிழக அரசை குற்றம் கூறுகிறார். கேரள அரசு அரண்மனையை நன்றாகப் பராமரித்து வருகிறது. மறுபுறம், கோட்டையை பராமரிக்கும் பொறுப்பில் உள்ள தமிழக அரசு, அதை பாதுகாக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
1956 ஆம் ஆண்டின் மாநில மறுசீரமைப்பு தீர்வின்படி, பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்தின் 6.5 ஏக்கர் கேரள அரசின் பாதுகாவலரின் கீழ் தக்க வைக்கப்பட்டுள்ளது. மேலும் கோட்டை தமிழக அரசின் கீழ் வருகிறது. பத்மநாபபுரம் நகராட்சியின் முன்னாள் பா.ஜ.க கவுன்சிலர் A. ராஜா இதுபற்றி கூறுகையில், "186 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோட்டையை, சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, தமிழ்நாடு பொதுப்பணித்துறை (PWD) ஊழியர்கள் இருவர் பராமரித்து வந்தனர். அவர்கள் வெளியேறிய பிறகு, எந்த பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை மற்றும் பிளவுகள் வழியாக செடிகள் வளர ஆரம்பித்தன. மேலும் தற்பொழுது இது கோட்டையின் முழு கட்டமைப்பையும் பலவீனப்படுத்தியது" என்று அவர் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கோட்டையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து செங்கற்கள் சில வீடுகள் மீது விழுந்ததாக குடியிருப்பாளரான ஸ்டெல்லா கூறினார். அதிகாரிகள் உடனடியாக கட்டமைப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான மக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று அவர் கூறினார். இதற்கிடையில், பத்மநாபபுரம் பேரூராட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "குடிமைப் பிரிவினர் குப்பைகளை அகற்றி, மக்கள் அதன் அருகே செல்லாதபடி எச்சரிக்கை பலகையை வைத்துள்ளனர்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் முன்னாள் துணை ஆட்சியர் H. முகமது ஹைதரலி இது குறித்து பேசுகையில், "பத்மநாபபுரம் 1600ம் ஆண்டு முதல் கோட்டை நகரமாக விளங்கி வருகிறது.முதல் கோட்டை வேணாடு மன்னன் வீர ரவிவர்மா என்கிற குலசேகரனால் கட்டப்பட்டது. பின்னர், திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மார்த்தாண்ட வர்மா மீண்டும் கட்டினார். கோட்டையின் புனரமைப்பு பணிகள் 1744 இல் நிறைவடைந்தன "என்று அவர் கூறினார். 275 ஆண்டுகள் பழமையான கோட்டையை பலப்படுத்த அதிகாரிகளை வலியுறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy:Newindianexpress