Top
Kathir News
Begin typing your search above and press return to search.

'அன்னியத் தலையீடு வேண்டாம்' - களை கட்டும் #IndiaTogether #IndiaAgainstPropaganda ட்ரெண்டுகள்.!

'அன்னியத் தலையீடு வேண்டாம்' - களை கட்டும் #IndiaTogether #IndiaAgainstPropaganda ட்ரெண்டுகள்.!

அன்னியத் தலையீடு வேண்டாம் - களை கட்டும் #IndiaTogether #IndiaAgainstPropaganda ட்ரெண்டுகள்.!

By : Saffron Mom

  |  4 Feb 2021 4:14 PM GMT

சமீபத்தில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக குறிப்பிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த இடைத்தரகர்களும், அவர்களால் தவறாக வழிநடத்தப்பட்ட விவசாயிகளும், இதை சாக்காக கொண்டு இந்தியாவை துண்டாட துடிக்கும் காலிஸ்தானிகளும் டெல்லியை கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக முற்றுகையிட்டு வருகின்றனர்.

11 கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகும் தேவையான திருத்தங்கள், 18 மாதங்கள் வேளாண் சட்டங்களை ஒத்தி வைத்தல், உச்சநீதிமன்றக் கமிட்டி என எதற்கும் விவசாய சங்கங்கள் ஒத்து வரவில்லை. இதனால் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து வந்த அவர்கள், ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்த அனுமதி கோரினர்.

அன்று நடந்த வன்முறை மக்களை கொதிப்படைய செய்ததுடன், போராட்டத்திற்கு இருந்த சிறிது ஆதரவும் இழந்தது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க பாப் பாடகி ரிஹானா மற்றும் போர்ன் நடிகை மியா கலீஃபா ஆகியோர் விவசாய போராட்டத்திற்கு ஆதரவு என்ற பெயரில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசாங்கத்திற்கு எதிரான குறிவைத்த பிரச்சாரத்தில் ட்விட்டரில் நேற்று குதித்தனர். பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் சிறுமி க்ரெட்டா தன்பெர்க்கும் இந்த விஷயத்தில் தனது பங்களிப்பை பதிவு செய்தார்.

ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு, உலகெங்கிலும் உள்ள மக்கள் பங்களிக்கும் விதத்தை விவரிக்கும் ஒரு கூகுள் டாக்குமெண்ட்டை அவர் பகிர்ந்தபோது தான் விஷயம் வினையாகிப் போனது.

( க்ரெட்டா தன்பர்க் தெரியாமல் உடைத்த குட்டு என்ன? சர்வதேச அளவில் இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்படும் சதி.! )

ஜனவரி ஆரம்பம் முதலே இந்த செயல்பாடுகள் ஆரம்பித்துள்ளது. அதாவது ஜனவரி 26, குடியரசு தின பேரணிக்கு முன்பாகவே சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த போராட்டம் ஆன்லைனிலும், நிஜ வாழ்விலும் போராட வேண்டிய வழிமுறையைப் பற்றி விரிவாக பேசுகிறது.

சர்வதேச அளவில் இந்தியாவிற்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் வந்த இந்த பிரச்சாரத்தை முறியடிக்க, இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா #IndiaTogether #IndiaAgainstPropaganda போன்ற ஹாஷ்டாக்களில் விளக்கம் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து இந்திய சினிமா, அரசியல், விளையாட்டுத் துறை பிரபலங்களிடமிருந்து ஆதரவு குவிந்தது.

இந்த ஹாஷ்டாக் வருவதற்கு முன்பே கிரிக்கெட் வீரர் ஓஜா, பாடகி ரிஹானாவை இந்திய விவகாரங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம் என பதிலடி கொடுத்திருந்தார்.

சச்சின் டெண்டுல்கர், அயல் நாட்டவர் இந்திய விவகாரங்களில் கலந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என ட்விட் போட்டதும் ட்விட்டர் களை கட்டத் தொடங்கியது.

பின்னர் இந்திய கிரிக்கெட் கேப்டன் கோஹ்லி, ரஹானே, ரோஹித் சர்மா, பாண்ட்யா, அணில் கும்ப்ளே, ரவி சாஸ்திரி, ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா மற்றும் சிலரின் ஆதரவுடன் உச்சத்திற்கு சென்றது.

பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார், சுனில் ஷெட்டி, அஜய் தேவ்கன், கரண் ஜோகர், லதா மங்கேஸ்கர் உள்ளிட்ட பலரும், பி.டி உஷா, யோகேஸ்வர் தத், சாய்னா நேவால் போன்ற விளையாட்டு வீரர்களும் பிறகு அயல்நாட்டு தலையீட்டை தவிர்த்து இந்தியா ஒற்றுமையுடன் நடை போட வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.இதனால் இடதுசாரிகளும், இஸ்லாமியவாதிகளும், எதிர்க்கட்சிகளும் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். ஒட்டு மொத்த இந்தியாவும் சேர்ந்து ஒருமித்த குரலில் இந்தியாவை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Next Story