2ஜி ஊழலும், கார்ப்ரேட் தரகரிடம் உட்கட்சி அரசியல் மற்றும் பிசினஸ் பேரங்கள் பேசிய தி.மு.க-வின் அந்தரங்க கார்ப்ரேட் லீலைகள்!
By : Kathir Webdesk
உலகத்தையே கவனிக்க வைத்தது காங்கிரஸ் – தி.மு.க-வின் ஸ்பெக்ட்ரம் ஊழல். "சில தனியார் நிறுவனங்கள் கொழுப்பதற்காக அரசாங்க வளம் தாரைவார்க்கப்பட்டது. உண்மையில் 1.76 லட்சம் கோடி வரை விற்பனை செய்யப்பட்டு இருக்க வேண்டிய 2ஜி ஸ்பெக்ட்ரம், அதில் ஆறில் ஒரு பங்கு விலைக்குத்தான் விற்பனை செய்யப்பட்டது" என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த மோசடிக்குத் துணையாக பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் கைமாறி இருக்கலாம் என்றும் புகார்கள் எழுந்தன. இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த உரிமங்களுக்கான ஏலம் மீண்டும் நடந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு மிக மிகக் குறைவாகவே இந்த ஏலம் போனது. 'பார்த்தீர்களா, நாங்கள் எந்த ஊழலும் செய்யவில்லை' என்று காங்கிரஸ் பேச ஆரம்பித்தது. இப்படி காங்கிரஸ் – தி.மு.க சேர்ந்து நடத்திய நாடகம் அனைத்தும் மக்களை கிறுக்குப்பிடிக்க வைத்து விட்டது.
மலைக்க வைக்கும் ஊழல் பேர்வழிகளின் பின்னணி
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்காக 2007-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் உரிமம் பெறத் தகுதி உடையவை என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென 2007-ஆம் ஆண்டு செப்டம்பர் 25 அன்று மாலை 3.30 மணியிலிருந்து 4.30 மணி வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே உரிமம் பெற தகுதியுள்ளவை என்று அறிவிக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் மட்டுமின்றி, உலக வரலாற்றில் கூட உரிமம் வழங்குவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட பிறகு, பின் தேதியிட்டு தகுதி காணும் நேரம் நிர்ணயிக்கப்பட்டதில்லை.
2ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீட்டு விவகாரத்தில் வெளிப்படையான அணுகுமுறையை கடைபிடிக்கும்படியும், 2001-ஆம் ஆண்டில் விலையில் அலைக்கற்றை உரிமத் தொகையை நிர்ணயம் செய்யாமல் 2007-ஆம் ஆண்டு விலையில் உரிமத் தொகையை நிர்ணயிக்கும்படியும் தி.மு.க-வின் ஆ.ராசாவுக்கு அப்போதையை பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதினார். அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்காக ஆ.ராசா கடைபிடிக்கும் அணுகுமுறை தவறானது என்று கூறி மத்திய நிதியமைச்சகமும் கடிதம் எழுதியது.
ஆனால், இதையெல்லாம் நிராகரித்து விட்டு, குறிப்பிட்ட நேரத்தில் உரிமம் கேட்டு விண்ணப்பித்த தமது ஊழல் கூட்டாளிகளுக்கு 122 உரிமங்களை மலிவு விலையில் வாரி வழங்கினார். பிரதமரின் அறிவுரையை மதிக்காமல் விதிகளை மீறி குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் உரிமம் வழங்கியது ஊழல் இல்லையா?
ஆ.ராசாவுடன் கூட்டணி அமைத்து மலிவு விலையில் அலைக்கற்றையை வாங்கிய நிறுவனங்கள் அதைவிட பல மடங்கு அதிக விலை வைத்து விற்பனை செய்திருக்கின்றனர். உதாரணமாக ஸ்வான் தொலைத்தொடர்பு நிறுவனம் ₹1537 கோடிக்கு வாங்கிய அலைக்கற்றையில் 45 விழுக்காட்டை சுமார் ₹4080 கோடிக்கு விற்பனை செய்தது. இது அரசு நிர்ணயித்த விலையை விட 590 விழுக்காடு அதிகமாகும். அதேபோல், தொலைத்தொடர்புத்துறையில் அனுபவமே இல்லாத யுனிடெக் நிறுவனம் 23 மண்டலங்களுக்கான உரிமங்களை ₹1651 கோடிக்கு வாங்கியது.அவற்றில் 60 விழுக்காட்டை ₹11,620 கோடிக்கு விற்பனை செய்தது. இது அரசு நிர்ணயித்த விலையை விட 703% அதிகமாகும். இந்த கணக்குகளின் அடிப்படையில் பார்த்தால் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ஒட்டு மொத்தம் சுமாராக ₹44,100 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஊழல் நடந்தது எப்படி?
இது தீவிரமாக, முன்னாலேயே தீர்மானித்து செய்யப்பட்ட ஊழல். ஆகவே, எல்லாமே ராஜா, மன்மோகன் சிங், அவரை ஆட்டிவைக்குக் சோனியா, மற்ற அரசாங்கத்துறைகள், இவற்றின் ஒத்துழைப்புடன் தான் நடந்தேறியுள்ளது.
செப்டம்பர் 24, 2007: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கான விளம்பரம் பத்திரிக்கைகளில் வந்தன.
அக்டோபர் 1, 2007: விண்ணப்பங்கள் கொடுக்க கடைசி நாள்.
ஜனவரி 10, 2008: விளம்பரத்திலோ ஒரு வாரம் கொடுக்கப்பட்டிருந்தது, ஆனால் செப்டம்பர் 25 வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் தாம் பரிசீலினைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த தேதி வரை 575 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. இதனால் பலர் தகுதியை இழந்தனர்.
ஜனவரி 10, 2008 அன்று மதியம் 1.47 அளவில் தங்களுடைய விண்ணப்பங்களுடன் 3.30-க்கு சஞ்சார் பவனில் வருமாறு பணிக்கப்பட்டது. அதாவது, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிறிது நேரம்தாம் தான் விண்ணப்பப்படிவம், பூர்த்தி செய்வது, வங்கியிலிருந்து குறிப்பிட்ட பணத்திற்கு டிடி பெறுவது, வங்கியின் பிணைப்பத்திரம் பெறுவது, மற்ற ஆவணங்களுடன் சேர்த்து அளிப்பது – முதலியவையெல்லாமே செய்வதற்காக ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் குறிப்பிட்ட கம்பெனிகள், அவற்றிற்கு இந்த விஷயம் முன்னமே தெரிந்திருந்தலால், தயராக இருந்தனவாம்.சாதாரணமாக,டெண்டர் எடுக்கும் பையன்களுக்குக் கூட,இந்த விவகாரம் நன்றாகவே புரிந்திருக்கும்.
இப்படி ஏன் ஊழலில் ஈடுபட வேண்டும்?
1.WiExpert Communications,
2.SV Telecom Systems,
3.Digitelco Communications,
4.Spectrus Communications and
5.Technotial Infoways.
இந்த கம்பெனிகள் கொடுத்துள்ள விலாசங்களில் சென்று பார்த்தபோது, அவை வீடுகளாக இருந்தனவாம். அதுமட்டுமல்லாது அவை நவம்பர் 5, 2007 அன்று தான் பதிவு செய்யப்பட்டதாம். ஆக, அவசர அவசரமாக ரிஜிஸ்ட்ரர் ஆஃப் கம்பனியில் பதிவு செய்யப்பட்டு,இந்த ஏலத்தில் பங்கு கொள்ளவே உருவாக்கப்பட்ட கம்பெனிகள் என்று தெரிகிறது. மேலும் தி.மு.க-வில் உள்ள அமைச்சர்களுக்கு கோடிகளில் ஊழல் செய்வது, வங்கிகளில் துணையோடு, வங்கிகளையே ஏமாற்றுவது முதலியனவெல்லாம் கைவந்த கலையே எனலாம்.
மொத்தம் 34 இடங்களில் ரெய்ட்
இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நீரா ராடியாவின் வீடு,அலுவலகத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதேபோல முன்னாள் அமைச்சர் ராசாவின் உறவினர்கள் வீடுகள் உள்பட தமிழகத்தில் மட்டும் 27 இடங்களில் அதிரடி ரெய்டு நடந்தது. நீரா ராடியா தவிர டிராய் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரதீபா பைஜாலின் வீட்டிலும் ரெய்டு நடந்தது. இவர் 2004 முதல் 2008 வரை டிராய் தலைவராக இருந்தவர். 2009-ல் ராடியாவின் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆ ராசா – நீரா ராடியா தொடர்புகள்
வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தவர் நீரா ராடியா. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோருக்கிடையே இவர் பாலமாக செயல்பட்டதாக கருதப்படுகிறது. மேலும், இவருக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான பலருடனும் தொடர்பு உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து இவரது தொலைபேசி பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன. அதில் மேலும் பல பரபரப்புத் தகவல்கள் கிடைத்தன. இந்த ஆடியோ பதிவுகள் லீக் ஆகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தின. இதையடுத்து நீரா ராடியாவை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேரில் அழைத்து பல மணி நேரம் விசாரித்தனர். இந்த விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
தொலைபேசி உரையாடல்கள், பதிவு செய்தல், தரகு வேலை
அதன் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் மற்றும் அவரது உதவியாளர் ரத்னம் ஆகியோர் நீரா ராடியாவுடன் பேசிய உரையாடல் அவுட்லுக், இந்தியா டுடே முதலிய பத்திரிக்கைகளில் வெளியியடப்பட்டன. ஜூன் 13, 2009 அன்று காலை 11:47:40 மணிக்கு இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் இதுவும் அடக்கம். மத்திய புலனாய்வுத்துறை நீரா ராடியா பலருடன் பேசிய 5,841 உரையாடல்களின் பதிவுகள், ஒவ்வொன்றும் சுமார் 30-40 நிமிடங்களுக்குள்ளவை, தங்களிடம் இருப்பதாக கூறினாலும், அதில் ஒரு சில ஆடியோ வெளியானதிற்கே தி.மு.க ஆட்டம் கண்டது.
டாடாவைப் பற்றி ராஜாத்தி , நீராவுடன் ஏன் பேச வேண்டும்?
இந்தியா டுடே விளக்கத்துடன் ஒரு ஆடியோ வெளியிட்டுவிட்டது. அதில்ராஜாத்தி டாடாக்கள் ஏதோ ஒரு வேலையை செய்ய வேண்டியதை செய்யாமல் இருந்ததால், மிகவும் கவலையுடன் இருப்பதாகவும், பிறகு வோல்டாஸுடன்(வோல்டாஸ் ஒரு டாடாகுழுமத்தின் கம்பெனி) பேசி முடிப்பதாகவும் உரையாடல் தெரிவிக்கிறது.
RATNAM TO RADIA: Madam (Rajathi) baat karna chahti hai, de doon? மேடம் (ராஜாத்தி) பேச விரும்புகிறார்கள், கொடுக்கட்டுமா,மேடம்?
RADIA: Haan haan, please ok (whispers to someone nearby 'Karunanidhi ki patni'). ஹா,ஹா, கொடுங்கள் ("கருணாநிதியின் மனைவி" என்று முணுமுணுக்கிறார் நீரா அருகில் இருந்த யாருடனொ)
RAJATHI TO RADIA: Hello, I am fine, how are you? ஹலோ, நான் நலமாக இருக்கிறேன், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
RADIA: How are things? How are things? எல்லாம் எப்படி இருக்கின்றன, சென்று கொண்டிருக்கின்றன?
RAJATHI: (Mumbles something inaudible) ………………………..(ஏதோ முணுமுணுத்தல்)
RADIA: Haan? (silence for sometime) ஹா……………………………
RAJATHI: What happened? என்னவாயிற்று?
RADIA: (Voice turning anxious) to? (கவலையுடன்) யாருக்கு?
RAJATHI: Aaahh. ஹா…………..ஹா.
RADIA: Tata? டாடா?
RAJATHI: Ah, yes. ஆ,ஆமாம்.
RADIA: (very anxious) Not done? (மிகுந்நக்கரையுடன்) நடக்கவில்லையா?
RAJATHI: No, not done (voice low). இல்லை, நடக்கவில்லை (தாழ்ந்த குரலில்)
RADIA:Ratnam there? ரத்தினம் அங்கு இருக்கிறாரா?
RAJATHI: Yes(இருக்கிறார்)
RADIA: I will talk, let me speak to him. I thought it was all done. நான் பேசுகிறேன்,அவருடன் பேச கொடுங்கள். நான் நினைத்தேன்,எல்லாம் நடந்து விட்டது என்று
RAJATHI: (voice low) Yes, ummm (hands over to Ratnam).(தாழ்ந்த குரலில்) சரி (ரத்தினத்திடம் கொடுக்கிறார்)
RADIA TO RATNAM: Hi Ratnam (tone changes, more authoritative).ஹை, ரத்தினம் (குரல் அதிகார தோரணைக்கு மாறுகிறது)
RATNAM:Hi madam. ஹை,மேடம்.
RADIA: What happened? It's not done? என்ன நடந்தது? அது நடக்கவில்லையா?
RATNAM: No madam, it's not done. I just give you a message, no madam. இல்லை மேடம், அது நடக்கவில்லை. நான் உங்களிடம் இந்தசெய்தியை தெரிவிக்கிறேன்.
RADIA: I didn't get a message (Then the two exchange notes about Radia's new mobile number and Cecilia, Kumar's assistant.) நான் எந்த செய்தியையும் பெறவில்லை (பிறகு இருவரும் ராடியாவின் புதிய செல்நெம்பர் மற்றும் குமாரின் உதவியாளரான சிசிலியாவின் நம்பரையும் பரிமாரிக்கொள்கின்றனர்)
RATNAM: But you said no, you yourself has done. ஆனால், நீங்களே செய்கிறேன் என்றீர்களே.
RADIA: Yeah! ஆமாம்
RATNAM: But that has not come. That's why I sent the message. ஆனால் அது வரவில்லையே. ஆகையால்தான் நான் செய்தியை அனுப்பினேன்
RADIA: I can't believe it, is it? How can that be possible? என்னால் நம்பமுடியவில்லை, அதெப்படி சாத்தியமாகும்?
RATNAM: No maam, it has not come. இல்லை மேடம், அது வரவில்லை
RADIA: What about Tatas? What's happening on that? டாட்டா பற்றி என்ன ஆனது? அது பற்றி என்ன நடக்கிறது?
RATNAM: Maam, Tata everything's ok, but this rent 50 per cent, yesterday டாடாவைப் பற்றி எல்லாமே சரியாக இருக்கிறது. 50%வாடகை…நேற்று…
I got a mail, that's why yesterday also I tried you. This agreement, they say that 50 per cent of the rent has to be paid by us. So I have already sent a mail to Krishna Kumar stating that it's not possible. Then I made a call to Krishna Kumar, he has not picked up and then I called Sanjay Ubhalia. He says that he will take up the issue with Krishna Kumar and sort it out. நேற்று மெயில் வந்தது. உங்களுக்கும் முயற்சிசெய்தேன்……50% வாடகை தரவேண்டும் என்று ஒப்பந்தம் கூறுகிறது.கிருஷ்ண குமாருக்கு அம்மாதிரி முடியாது என்று மெயில் அனுப்பியுள்ளேன். பிறகுகிருஷ்ண குமாருக்கு போன் செய்தேன். அவர் எடுக்கவில்லை. அதனால் சஞ்சய்உபாலியாவிற்கு போன் செய்தேன். அவர் பேசி சரி செய்கிறேன் என்றார்
RADIA: No, but when you were in Bombay, it was agreed that no rent.¦ ஆனால்,நீங்கள் பம்பாயில் இருக்கும்போது வாடகைஎதுவும்………ஒப்புக்கொண்………
RATNAM: Very clearly it was agreed and Krishna Kumar also said that he will talk to
Voltas and he will waive that. But yesterday whole day ten times I tried Krishna Kumar.
Krishna Kumar was in meeting it seems. தெளிவாக ஒப்புக்கொள்ளப்பட்டது.அதுமாதிரியே கிருஷ்ண குமாரும் வோல்டாசிடம் பேசி, வாடகையை தள்ளபடி செய்யசொல்கிறேன் என்றார். ஆனால், நேற்று பத்து முறை முயன்றும் கிருஷ்ண குமார்லைனில் வரவில்லை.
RADIA: No, I will speak to him. சரி,நான் அவரிடம் பேசுகிறேன்.
RATNAM: Yeah. யா
RADIA: But on the other matter I am surprised! ஆனால், அடுத்த சமாசாரம் எனக்கு விசித்திரமாக இருக்கிறது
RATNAM: Yes, maam, the other matter. That's why I am repeatedly calling Cecilia but
I am not able to reach her because that mobile is totally switched off. ஆமாம், அது விஷயமாக சிசிலியாவிற்கு போன் செய்து கொண்டிருந்தேன். ஆனால், அவள் எடுக்கவேயில்லை
RADIA: Let me talk to her. நான் அவளிடம் பேசுகிறேன்
ஆ. ராசா – நீரா ராடியா உரையாடல்
22.5.2009 9 மணி 48 நிமிடம் 51 விநாடிகள்
நீரா: ஹலோ?
ராசா: ராசா பேசுகிறேன்.
நீரா: ஹாய்! இப்போதுதான் பர்கா தத்திடமிருந்து எனக்கு செய்தி வந்தது.
ராசா: ஆ?
நீரா: பர்கா தத்
ராசா: அவர் என்ன சொல்கிறார்?
நீரா: இந்த விஷயம் குறித்து…. அவர் பிரதமரின் அலுவலகத்தோடு இன்றிரவு தொடர்பு கொண்டிருந்ததாக….அவர் சொல்கிறார். சோனியா காந்தி அங்கு சென்றதாக அவர் தான் என்னிடம் கூறினார். அவருக்கு (மன்மோகன் சிங்) உங்களிடம் பிரச்னை இல்லை; ஆனால் டி.ஆர். பாலு என்றால் பிரச்னை உள்ளது என்று அவர்தான் (பர்கா தத்) சொன்னார்.
ராசா: … ஆனால் தலைவருடன் இதுபற்றி விவாதிக்க வேண்டும்.
நீரா: ஆம், ஆம்… அவர் தலைவருடன் விவாதிக்க வேண்டும். அவர்தான் சொல்ல வேண்டும்.
ராசா: காலையில் இதுபற்றி விவாதிக்கப்படும்… ஏன் காங்கிரஸ் அநாவசியமாக…. ( ஒலிப்பதிவில் தெளிவில்லை). கூட்டணியில் குழப்பம் வருகிறது.
நீரா: இல்லை, கேள்வி இப்போது அழகிரி பற்றியல்லவா?
ராசா: ஆ?
நீரா: அழகிரி போன்ற சீனியர் தலைவர் இருக்கும் போது மாறனுக்கு ஏன் அமைச்சர் பதவி என்று அவருடைய ஆதரவாளர்கள் கேட்கிறார்கள்.
ராசா: அது வேறு விஷயம். ஆனால் இந்த விஷயங்களை எல்லாம் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும்.
நீரா: இதுதான் சரி. அவரை (பர்கா தத்) காங்கிரஸிடம்…
ராசா: நேரே தலைவரைத் தனியாகப் பார்த்து இந்த விஷயங்களை வெளிப்படுத்த வேண்டும்.
நீரா: தனியாகவா?
ராசா: தனியாக, யாராவது தகவலைக் கொண்டு செல்ல வேண்டும். பாலுவுடன் எங்களுக்குப் பிரச்னை இருக்கிறது என்று ஒரு ரகசியக் கடிதமாவது கொண்டு செல்ல வேண்டும்.
நீரா: காங்கிரஸிடமிருந்து தானே?
ராசா: ஆம்.
நீரா: ஓ.கே. நான் அவரிடம் (பர்கா) சொல்கிறேன். அவர் இப்போது அகமது படேலிடம் பேசிக் கொண்டிருக்கிறார். நான் படேலிடம் பேசுகிறேன்.
ராசா: அவர் போனிலாவது தொடர்பு கொள்ளட்டும். சார், இதுதான் பிரச்னை. எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ராசாவுடன் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எங்கள் பிரச்னை பாலுவுடன்தான் என்று சொல்லுங்கள்…
22.5.2009 மதியம் 2 மணி 29 நிமிடம் 41 விநாடிகள்
நீரா: ராசா, எப்படி இருக்கிறீர்கள்?
ராசா: அவர் என்ன சொல்கிறார் – கனி என்ன சொல்கிறார்?
நீரா: அவருக்கு எல்லாம் ஓ.கே. என்கிறார். அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறார்.
ராசா: ம்ம்…
நீரா: …. ஆனால் ஒரே விஷயம் அழகிரியுடன் யாராவது போய் பேச வேண்டும்… நீங்கள்தான் இதைச் செய்ய வேண்டும்.
ராசா: ம்ம்.
நீரா: எப்படி மாறன் போய் எல்லாரிடமும் பேசி வைத்திருக்கிறார் என்று….
ராசா: ஆ…. நான் ஏற்கெனவே பேசி விட்டேன், ஏற்கனவே பேசிவிட்டன்…
நீரா: தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களிடம் அவர் என்ன சொல்லி வைத்திருக்கிறார் என்று நீங்கள் சொன்னீர்களா?
ராசா: எனக்குத் தெரியும். அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என்ற விஷயத்தை காங்கிரஸ் தலைவர்கள் மனதில் விதைத்தவர்கள் யார்… எனக்குத் தெரியும்…
நீரா: இல்லை… அதுமட்டுமல்ல, அதுமட்டுமல்ல… பெரியவருக்கு ரொம்ப வயதாகிவிட்டது. அவருக்கு முதுமையால் தளர்ச்சி ஏற்பட்டு விட்டது. அவர் அதிக நாள் நீடித்திருக்கப் போவதில்லை. அதனால் நாளை மாறனும், ஸ்டாலினும்தான் கட்சியை நடத்துவார்கள் என்றும், காங்கிரஸ் தன்னுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில் மகிழ்ச்சியடையும் என்றும்… இறுதியில் மாறன் தான் ஸ்டாலினை ஆட்டுவிப்பார் என்றும் சொல்லியிருக்கிறார்.
ராசா: ம்ம்.
நீரா: இப்படித்தான் அவர் பேசியிருக்கிறார்.
ராசா: ஓஹோ! ஓஹோ!
நீரா: அழகிரியைக் கிரிமினல் என்றும்…
ராசா: ம்ம்.
நீரா: அவர் ஐந்தாம் வகுப்பு கூடத் தாண்டாதவர் என்றும்…
ராசா: ஓ…
நீரா: இப்படியெல்லாம்தான் அவர் சொல்லியிருக்கிறார்.
24.5.2009 காலை 11 மணி 5 நிமிடம் 11 விநாடிகள்
நீரா: மாறன் தன்னைப்பற்றி என்னெல்லாம் சொல்லியிருக்கிறார் என்று தெரியுமா?
ராசா: அழகிரிக்கு இதெல்லாம் தெரிந்தது தான்.
நீரா: தெரியும் அல்லவா?
ராசா: அழகிரிக்குத் தெரியும். ஆனால் அவர் தந்தையுடன் பேச முடியாது. சரியான நேரத்தில் பேசுவார். ஒரே விஷயம், மாறன் எனக்கு எதிரான பிரசாரத்தை கிளப்பிவிடுவார்.
நீரா: ம்ம்..
ராசா: அதை கவனித்துக் கொள்ள வேண்டும்.
நீரா: நீங்கள் வேறுவிதமாக சண்டை போட வேண்டும்.
ராசா: ம்ம்.. பிரதமர் மீண்டும் வருகிறார். அப்படி அது இதுவென்று அவர் பத்திரிகைகளிடம் சொல்லுவார்.. ஸ்பெக்ட்ரம்…
நீரா: நோ நோ.. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கவலைப்படாதீர்கள். உங்களிடமிருந்து நிறைய பெற வேண்டியிருக்கிறது. காங்கிரஸ் கூட அந்த அறிக்கை விட நேர்ந்தது, அல்லவா? நான் சுனில் மிட்டலிடம் பேசினேன்… சண்டோலியா உங்களிடம் சொன்னாரா?
ராசா: எனக்குத் தெரியாதே.
நீரா: அவர் விஷயத்தை விட்டுவிடுங்கள் என்று சொன்னேன். யாருக்கும் பிரயோஜனமில்லை.
ராசா: ம்ம்.. ராசாவுடன் இன்னும் ஐந்து வருடங்கள் நீங்கள் வேலை பார்த்தாக வேண்டுமென்று அவரிடம் சொல்லி வையுங்கள்… அதனால் எதுவும்…
நீரா: அவரிடம் சொன்னேன். அவரிடம் சொன்னேன். ஆனால் நீங்களும் சுனிலிடமிருந்து (சுனில் மிட்டல்) கொஞ்சம் தள்ளியே இருக்க வேண்டும். நீங்கள் நடுநிலையோடு இருக்க வேண்டும்.
ராசா: ஆ, இருக்கலாம்
நீரா ராடியா - பூங்கோதை உரையாடல்
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் குற்றச்சாட்டில், முக்கிய ஆதாரமாக சி.பி.ஐ. அலசிய லாபியிஸ்ட் நீரா ராடியா உடனான தொலைபேசி உரையாடல்களில் 800 டேப்களை கசிய விட்டிருக்கிறதுஅவுட்லுக் இதழ்.
இவற்றில் தமிழக முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணாவும், லாபியிஸ்ட் நீரா ராடியாவும் பேசிய உரையாடல் ஆடியோ
நீரா ராடியா: ஹலோ...
பூங்கோதை: ஹலோ. இது நீராவா?
நீரா: ஆமா, ஹாய் எப்படி இருக்கிறீர்கள்?
பூங்கோதை: நான் நன்றாக இருக்கிறேன். எல்லாம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது?
நீரா: ம். நான் நன்றாக இருக்கிறேன். ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிவிட்டார் அல்லவா?
பூங்கோதை: எனக்குத் தெரியும். என்ன நடக்கிறது?
நீரா: எனக்குத் தெரியாது...
பூங்கோதை: எங்களுக்கு கிடைத்த ஒரு விஷயம் என்னவென்றால், நடக்கும் விஷயங்களை முழுமையாக நம்பும் வரை எதுவும் நடந்திடாது என்று அவர் (கனிமொழி) சொல்லி வருகிறார்.
நீரா: ம்..
பூங்கோதை: அப்புறம், எப்படியும் செப்டம்பர் துவக்கத்தில் தான் நடக்கக் கூடும் என்றும் அவர் தொடர்ந்து சொல்லி வருகிறார். அது நிகழுமா என்று எனக்குத் தெரியவில்லை... நீங்கள் பார்த்தீர்களென்றால்..
நீரா: இல்லை... இப்படி இப்படித்தான் அவர் தொடந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால், விஷயம் என்னவென்றால், கனி... பாருங்கள்,என்னால் குதிரைக்கு தண்ணீரைக் காட்டத்தான் முடியுமே தவிர, தண்ணீரைக் குடிக்க வைக்க நிர்பந்திக்க முடியாது. நீங்கள் என்ன செய்யலாம்; என்ன செய்யக் கூடாது என்பதை ஜோதிடம் சொல்லும் இல்லையா?
பூங்கோதை: ம்...
நீரா: இதுதான் உங்கள் பாதை என்று ஜோதிடம் சொல்லும். அந்தப் பாதையை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் இல்லையா?
பூங்கோதை: ம்.ம்...
நீரா: ஆனால், அவர் தனது பாதையை தேர்ந்தெடுக்கவில்லை. நீங்கள் இணைமைச்சர் பதிவியை ஏற்க வேண்டும் என்று அவரிடம் சொல்லி வந்தேன்.
பூங்கோதை: ம்.
நீரா: ஆனால், அவருக்கென்று தனி பார்வை இருக்கலாம். ஆனால், அவர் முதலில் தன்னை கவனித்துக் கொள்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
பூங்கோதை: (சிரிக்கிறார்)
நீரா: அவர் மற்ற எல்லோரையும் கவனத்தில் கொள்கிறார்.
பூங்கோதை: ம். ஆம், நாங்கள் எல்லோருமே அவரிடம் இதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தோம். அதனால், அதை எண்ணி அவர் மன வருத்தம் தான் அடைந்தார். (சிரிக்கிறார்)
நீரா: ம்.. (சிரிக்கிறார்)
பூங்கோதை: நானும் அவரிடம் இதைத்தான் சொன்னேன். அதுவும், நாங்கள் டெல்லிக்கு வருவதற்கு முன்பே அவரிடம் சொன்னேன். உன் வாழ்க்கையில் முதலில் உன்னைத் தான் கவனித்துக் கொள்ள வேண்டும்; எல்லாருமே தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்கிறார்கள். இது அரசியல்... அல்லவா?
நீரா: சரிதான். சரிதான்.
பூங்கோதை: அரசியலில் நம்பவைத்து கழுத்தறுப்பதும் உண்டு. உனக்கு யாரும் நண்பர்களும் இல்லை; எதிரிகளும் இல்லை. அல்லவா?
நீரா: சரிதான். சரிதான்.
பூங்கோதை: அவர் என்ன சொல்கிறார்?
நீரா: ம்... எனக்கு ஒன்றும் தெரியவில்லை. ஒருவேளை தவறு செய்துவிட்டோம் என்று அவர் நினைக்கிறாரோ என்னவோ...
பூங்கோதை: ம்.. (சிரிக்கிறார்)
நீரா: நாம் அனைவரும் அவரிடம் பேச வேண்டும், இல்லையா?
பூங்கோதை: ஆம்... நாங்கள் டெல்லி வரும் போது, நாம் அனைவரும் அமர்ந்து பேசுவோம்.
நீரா: ம்.. அவர் அடுத்த வாரம் டெல்லிக்கு வருகிறார் அல்லவா? நாடாளுமன்றக் கூட்டத்துக்காக..
பூங்கோதை: ம். ஆனால்... நான் டெல்லி வர வேண்டும் என்றால், முன்கூட்டியே அவரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
நீரா: ஆமாம். எனக்குத் தெரியும்.
பூங்கோதை: இப்போது என்னுடைய இலாகா தகவல் தொழில்நுட்பம். நிலுவையில் நிறைய வேலைகள் உள்ளன. அடுத்த வாரம் கூட ஒரு ரோட் ஷோ நடத்த திட்டமிட்டிருக்கிறேன். ம்... சச்சின் எப்படி இருக்கிறார்...? நன்றாக இருக்கிறாரா?
நீரா: ம்.. அவர் நன்றாக இருக்கிறார்.. நன்றாக இருக்கிறார்..
பூங்கோதை: நான் முதலில் சச்சினுக்கும், எனது அமைச்சருக்கு எழுதத் தொடங்கியிருக்கிறேன்.
நீரா: ம்.. ம்..
பூங்கோதை: இ-கவர்னன்ஸ் ஒப்பந்தத்தை அவருக்கு கொடுக்க முடிகிறதா என்று பார்ப்போம்.
நீரா: மிக நன்று. அதை நீங்கள் செய்ய வேண்டும்.
பூங்கோதை: உங்களது நண்பரை கனி சந்திக்க ஒப்புக் கொண்டதற்கு ஒரே காரணம், அவரிடம் நான் தொடர்ந்து சொல்லி வந்தது தான். அந்த விவகாரத்தை தவிர திடீரென்று அவர் ஏதோ ஒன்று நடக்கும் என்று சொன்னார். ஆனால், என்னவென்று அவர் சொல்லவில்லை....
நீரா: அவர் என்னுடைய கஸின் பிரதர் தான்.
பூங்கோதை: எந்த நேரத்திலும் எதையும் விட்டு விட வேண்டாம் என்று நான் சொன்னேன்... பிறகு சில விஷயங்களில் மாற்றம் ஏற்பட்டது. அதைத் தவிர... அவருக்கு நாம் என்ன செய்ய முடியும் என்பதில் எனக்கு சிறிது கவலையாக இருக்கிறது.
நீரா: அவர் (கனிமொழி) திங்கட்கிழமை டெல்லி வரட்டும். நான் பேசுகிறேன். நீங்களும் அவரிடம் பேசுங்கள்.
பூங்கோதை: ம்...
நீரா: நான் அவரிடம் பேசுகிறேன். நீங்களும் பேசுங்கள்.
பூங்கோதை: அதுவே போதுமானது என்று நினைக்கிறேன்.
நீரா: அவரிடம் நான் திங்கட்கிழமை பேசுகிறேன். தாம் தவறு செய்துவிட்டதாக ஏற்கெனவே என்னிடம் அவர் கோட்டிட்டு காட்டியிருக்கிறார். அவரிடம் பேசிய பிறகு, என்ன செய்ய முடியும் என்பது பற்றி பார்த்துக்கொள்ளலாம். இன்னும் கூட ஒரு வாய்ப்பு இருக்கும் என்றே நினைக்கிறேன். பார்ப்போம்.
பூங்கோதை: இல்லை.. நான் என்ன நினைக்கிறேன் என்றால், என்னுடைய அனுபவத்தில் முதல்வரைத் தெரிந்த வரையில், அவர் கனியை விட்டுவிட மாட்டார். பழைய படி, சரியான நேரத்தில் அவரைக் கொண்டு வருவார் என்றே நம்புகிறேன்.
நீரா: எனக்குத் தெரிந்த வரையில், அழகிரியோடு அவர் நட்பாக பழகினால் தான் நல்லது என நம்புகிறேன். இதற்காக, நீங்கள் தான் அவரை ஊக்கப்படுத்த வேண்டும். ஏனென்றால், டெல்லியில் அழகிரியால் நீண்ட காலம் தங்க முடியும் என்று தோன்றவில்லை.
பூங்கோதை: நீங்கள் அப்படியா நினைக்கிறீர்கள்?
நீரா: அதற்குரிய திறன் அவரிடம் இல்லையென்றே நினைக்கிறேன்.
பூங்கோதை: இல்லை. இல்லை. நீங்கள் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்.
நீரா: நீங்களே யோசியுங்கள்.
பூங்கோதை: நம்பவைத்து கழுத்தறுப்பவர்களே அரசியல்வாதிகள்...
நீரா: இல்லை, இல்லை... என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எனக்கு அது புரிகிறது. ஆகவே தான் அவர் தமிழ் நாட்டில் இருக்கவே விரும்புகிறார். அவர் எதற்கு இங்கே இருக்க வேண்டும்?
பூங்கோதை: தாம் ஏற்கெனவே மதுரை மிகவும் மிஸ் பண்ணுவதாகச் சொல்கிறார். தாம் திரும்பச் செல்ல வேண்டும், திரும்பச் சென்று விட வேண்டும் என்று தான் கூறி வருகிறார்.
நீரா: நான் உங்களுக்குச் சொல்வது இதுதான். அவரோடு (அழகிரி) அவரை (கனிமொழி) நட்பாக இருக்கச் சொல்லுங்கள். நீங்கள் என்னை நம்புங்கள்.
பூங்கோதை: ம்.. நான் பேசுகிறேன். நான் இந்த வாரத்தின் இறுதியிலோ அல்லது அடுத்த வாரத்தின் துவக்கத்திலோ அங்கு வருகிறேன். நான் சந்திக்கிறேன்...
நீரா: நல்லது.. நல்லது... நான் இங்கேயே தான் இருப்பேன். சந்திப்போம்.
இத்தனை இருந்தும் மக்களை முட்டாளாக்கிய தி.மு.க – காங்கிரஸ்
வாடர்கேட் டேப்புகள் அமெரிக்காவை மாற்றியதைப் போல நீராகேட் டேப்புகள் இந்தியாவை மாற்றும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், அத்தனை ஆதாரங்களையும் குறுக்கு வழியில் மாற்றி தனக்கு சாதகமாக்கி கொண்டே வந்தது தி.மு.க - காங்கிரஸ் ஊழல் கூட்டணி. கடந்த ஆண்டு உலகையே அதிர வைத்த 2ஜி ஊழல் வழக்கிலிருந்து தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேரும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தியாவின் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டனையின்றி விடுதலை செய்யப்படுவதும், தங்களைத் தாங்களே உத்தமர்களாக சித்தரித்துக் கொள்வதும் அதிர்ச்சியளிக்கிறது.
2ஜி ஊழல் வழக்கை 6 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி ஓ.பி.சைனி ஒரு வரி தீர்ப்பை மட்டுமே அளித்துள்ளார். 2ஜி ஊழல் வழக்கில் 17 பேர் மீதான குற்றச்சாட்டுகளை ஐயத்திற்கு இடமின்றி நிரூபிப்பதில் சி.பி.ஐ மிக மோசமாகத் தோல்வியடைந்து விட்டதாகவும், ஐயத்தின் பலனை குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு வழங்கி விடுதலை செய்வதாகவும் நீதிபதி ஓ.பி. சைனி அவரது ஒரு வரித் தீர்ப்பில் கூறியிருக்கிறார்.
அதாவது இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்தது உண்மை, ஆனால், அந்த ஊழல் குறித்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதுதான் தீர்ப்பில் பொருள் ஆகும்.
இந்த ஊழல் குறித்த சில ஆவணங்கள் விசாரணை அமைப்புக்கு கிடைக்காமல் தடுக்கப் பட்டதாலும், குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ அமைப்பு ஐயத்துக்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதாலும் தான் ஆ.ராசா,கனிமொழி உள்ளிட்ட 17 பேரும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். இத்தீர்ப்பைப் பார்க்கும் போது தி.மு.க மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்த நீதிபதி சர்க்காரியா "விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் வல்லவர்" என்ற பட்டத்தை நீதியரசர்சர்க்காரியாவிடமிருந்து அந்தக் காலத்திலேயே பெற்றவர் கருணாநிதி என்பது தான் நினைவுக்கு வருகிறது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்திருக்கிறது. ஆனால், அதை நிரூபிக்க முடியாத அளவுக்கு விஞ்ஞான அடிப்படையில் ஊழல் செய்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை. அநீதியும், ஊழலும் இப்போது வென்றிருக்கிறது. அதனை முறியடிக்கும் நோக்கில் டெல்லி தனி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசும், மத்திய புலனாய்வுப் பிரிவும் மேல்முறையீடு செய்து ஊழல் குற்றவாளிகளை சிறையில் தள்ள முனைப்பு காட்டி வருகின்றன.