Kathir News
Begin typing your search above and press return to search.

ஆப்கானிஸ்தான்: கடத்தும் போதும் ஜோக்கடித்த காமெடியனை படுகொலை செய்த தலிபான்கள்.!

தலிபான்கள் அவரை கன்னத்தில் பளார் பளார் என அறை விடுவதுமான வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வலம் வருகின்றன.

ஆப்கானிஸ்தான்: கடத்தும் போதும் ஜோக்கடித்த காமெடியனை படுகொலை செய்த தலிபான்கள்.!

Saffron MomBy : Saffron Mom

  |  24 Aug 2021 10:19 AM GMT

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை இரண்டாவது முறையாக கைப்பற்றிய பிறகு நாங்கள் யாரையும் பழிவாங்க மாட்டோம் என்று பொதுமன்னிப்பு வழங்கியதாக அறிவித்தனர். ஆனால் வீடு வீடாகச் சென்று, முன்னால் ஆப்கான் ராணுவ படையினரையும், காவல்துறையினரையும், பத்திரிகையாளர்களையும், அமெரிக்க நிறுவனங்களுக்கு வேலை செய்தவர்களையும் தேடித்தேடி கொலை செய்து வருவதாகவும், அவர்கள் கிடைக்கவில்லை என்றால் அவர்களுடைய குடும்பத்தினரையும் நெருங்கிய உறவினர்களையும் கொலை செய்ததாகவும் பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், தலிபான்களை கிண்டல் செய்து டிக் டாக் வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் ஒரு பிரபல காமெடியனை தலிபான்கள் கொலை செய்வதற்காக இழுத்துச் சென்றனர். தன்னைக் கடத்தி செல்லும் போது கூட தலிபான்களை குறித்து தொடர்ந்து ஜோக்குகளை அந்த காமெடியன் உதிர்த்து வருவதும் இதற்காக தலிபான்கள் அவரை கன்னத்தில் பளார் பளார் என அறை விடுவதுமான வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வலம் வருகின்றன.



இந்த வீடியோ ஜூலை கடைசியில் படமாக்கப்பட்டது என்றும் அந்த காமெடியன் நாசர் முஹம்மத் என்ற காஷா ஸ்வான் என்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் நிறுவனம் கூறுகிறது. காபுல் நகரம் தலிபான்களிடம் வீழ்ந்த ஜூலை மாத இறுதியில் அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அந்த காமெடியனுக்கு இடதுபுறம் அமர்ந்திருக்கும் ஒரு தலிபான் தொடர்ந்து சிரிப்பதும் ஒரு பெரிய துப்பாக்கியை கையில் வைத்திருப்பதும் தெரிகிறது.

தகவல்களின்படி, பல முறை துப்பாக்கியால் சுடப்பட்டும் கழுத்து அறுக்கப்பட்டும் அவர் கீழே கிடந்தார். தலிபான்கள் முதலில் இவரின் கொலையில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்று தெரிவித்து இருந்தாலும் பிறகு காரில் இருந்த அந்த இரு நபர்களும் தலிபான்கள் தான் என ஒப்புக் கொண்டனர். மேலும் அந்த காரில் இருந்த நபர்கள் கைது செய்யப்பட்டு தலிபான் நீதிமன்றத்தில் ஒப்படைக்க படுவார்கள் என்று தெரிவித்தனர்.




தலிபான்களை கொலை செய்ததாக தலிபான்களால் குற்றம் சாட்டப்பட்ட காமெடியன் இதற்கு முன்னதாக ஆப்கான் காவல்துறையினரிடம் வேலை செய்ததாகவும், பழிவாங்கும் நோக்கில் இதற்காக அவர் கொல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. அவருடைய கொடூரமான கொலை, இது போன்ற பழி வாங்கும் கொலைகளை குறித்து அச்சத்தை மக்களின் மனதில் ஏற்படுத்தியுள்ளது.

இவரது கொலைக்குப் பிறகு மலாலாவின் தந்தை சமூக வலைத்தளங்களில் இதற்கு கண்டனம் தெரிவித்தார். சீர்திருத்தம் செய்யப்பட்ட தாலிபானாக காட்டிக்கொண்டு பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருக்கும் தலிபான்களுக்கு இந்தக் கொலை பெரும் அடியாக விழுந்திருக்கிறது.

தலிபான்கள் இதற்கு முன்னால், ஆப்கான் அரசாங்கம், அமெரிக்க ராணுவம், அமெரிக்க நிறுவனங்களுடன் வேலை செய்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் வராது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் சமீப காலங்களில் கடும் மனித உரிமைகள் மீறல்கள் அங்கு நடைபெற்று வதற்கான ஆதாரங்கள் வலுத்துக் கொண்டே வருகின்றன.

மனித உரிமைகள் குழு ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் சமீபத்தில் தலிபான் தீவிரவாதிகள் ஹசாரா இனக்குழுவைச் சேர்ந்த 9 ஆண்களை சித்ரவதை செய்து படுகொலை செய்துவிட்டதாக சாட்சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள். பல முன்னாள் ஆப்கன் காவல்துறையினர் கொலை செய்யப்படும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. விமான நிலையத்திற்கு வெளியே கூட மக்களை தொந்தரவு செய்வதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.


Cover Image Courtesy: Daily Mail

Next Story
கதிர் தொகுப்பு
Trending News