தாலிபான்களுக்கு ஆதரவு வழங்கும் பாகிஸ்தான் விமானப்படை? அதிர்ச்சித் தகவல்கள்!
By : Saffron Mom
ஆப்கானிஸ்தான் தாலிபான்களுக்கு பாகிஸ்தான் வெளிப்படையாகவும்/மறைமுகமாகவும் ஆதரவளிப்பது வெளிப்படையான விஷயம் என்றாலும் தற்போது அதிகாரப்பூர்வமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானின் முதல் துணைக் குடியரசுத் தலைவர் அம்ருல்லா சலே வியாழக்கிழமை செய்த ட்வீட்டில், "தலிபான்களை ஸ்பின் போல்டாக் பகுதியில் இருந்து வெளியேற்றுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் பாகிஸ்தான் விமானப்படை எதிர்கொள்ளும் என்று ஆப்கானிஸ்தான் ராணுவம் மற்றும் விமானப்படைக்கு பாகிஸ்தான் விமானப்படை அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுத்துள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், 'பாகிஸ்தான் விமானப்படை இப்போது சில பகுதிகளில் தலிபான்களுக்கு நெருக்கமான விமான ஆதரவை அளித்து வருகிறது'. என்று தெரிவித்தார்.
வியாழக்கிழமை பாகிஸ்தான் இராணுவத்திடமிருந்து "எச்சரிக்கையைப் பெற்ற பின்னர்" காந்தஹாரின் ஸ்பின் போல்டக்கில் மூன்று ஆப்கானிஸ்தான் விமானப்படை ஏ 29 விமானங்களின் தலிபான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டது போன்ற செய்தி அறிக்கைகளால் அவரது கூற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் பத்திரிகை வெளியீடான டோலோ (TOLO) நியூஸ், தனது அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்ட அரசாங்க உரையாடல் நகல்களில் "எல்லைக்கு (பாகிஸ்தானுடன்) நெருங்கி வருவதாக AAF எச்சரிக்கப்பட்டதைக் காட்டுகிறது" என்று தெரிவித்தது. தவிர, ஆப்கானிஸ்தான் இராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், சாமன் மற்றும் ஸ்பின் போல்டாக் ஆகிய சர்வதேச எல்லைப் புள்ளியை நோக்கி 18 கிலோமீட்டருக்கு அருகில் செல்ல வேண்டாம் என்று தாங்கள் எச்சரிக்கப்பட்டதாகக் கூறினார்.
சர்வதேச சட்டங்களின் அடிப்படையில், ஒரு ராணுவ ஆபரேஷன் மேற்கொள்ளும்போது இராணுவ விமானம் மற்றொரு நாட்டின் எல்லைக்கு 10 கடல் மைல்களுக்கு (18.5 கிலோமீட்டர்) நெருங்கக்கூடாது என்று டோலோ (TOLO) நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அம்ருல்லா சலேஹ் மேலும் செய்துள்ள ட்வீட்டில் "பாக் விமானப்படை மற்றும் பாக் இராணுவம் குறித்த எனது ட்வீட்டை யாராவது சந்தேகித்தால், ஆதாரங்களை பகிர்ந்து கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ஆப்கானிஸ்தான் விழுங்க முடியாத அளவுக்கு பெரியது" என்று அவர் பாகிஸ்தானை எச்சரித்தார்.