Kathir News
Begin typing your search above and press return to search.

இந்த கோவிலுக்கு சென்றால் கெட்ட நேரம் கூட நல்ல நேரமாக மாறும் அதிசயம்!

இந்த கோவிலுக்கு சென்றால் கெட்ட நேரம் கூட நல்ல நேரமாக மாறும் அதிசயம்!
X

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  24 Sep 2022 12:45 AM GMT

தென்காசி மதுரை செல்லும் வழியில் சுப்பலாபுரம் ஊருக்கு அருகில் எரிச்சநத்தம் சாலையில் 2 கி.மி தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில்.

இந்த கோயிலின் மூலவர் காலா தேவி அம்மன் . அதாஇந்த வது காலம் என்கிற தத்துவத்தை சொல்கிற அதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிற கோயிலாக இந்த கோயில் திகழ்கிறது. நவகிரஹங்களுக்கென்று தனித்தனியாக கோயில்கள் உண்டு ஆனால் காலத்திற் கென்றே அமைந்திருக்கிற கோயில் இது ஒன்று தான் .

கோயிலின் கோபுரத்தில் நேரமே உலகம் என்று எழுதியிருப்பதை காணலாம் . இந்த கோயிலில் அமர்ந்திருக்கும் காலா தேவி அம்மனை வழிபட்டால் கெட்ட நேரம் கூட நல்ல நேரமாக மாறும் என்பது நம்பிக்கை. இந்த கோயில் கோபுரம் முரம் போன்ற அமைப்பில் இருக்கும் 52 அடி உயரத்தில் அமைந்துள்ளது . முரத்தில் அரிசியை புடைக்கும் போது கல் குப்பை எல்லாம் எப்படி வெளியேறுகிறதோ அதே போல் இந்த கோயிலில் நுழையும் போதே நம் கெட்ட நேரங்கள் மாறி விடுவதாக நீண்ட காலமாக நம்பபடுகிறது. இங்கு வந்து பயனடைந்த பக்தர்களும் அதையே கூறுகிறார்கள்

இந்த கோயிலில் சூரியன் அஸ்தமனமானவுடன் மாலை 6 மணி தொடங்கி விடிய விடிய நடை திறந்திருக்கும் பிறகு சூரியன் உதிக்கும் முன்பு நடை சாற்றதப்படும் . இந்த கோயில் நீளமும் கற்ப கிரகமும் 52 அடி அளவில் அமைக்க பட்டிருக்கிறது . கற்பகிரகத்தில் 5 சக்கரங்களுக்கு நடுவில் காலா தேவி வீற்றிருக்கிறாள் . கற்பகிரகத்தினுள் வீற்றிறுக்கும் காலாதேவி ஒரு அங்குலம் அளவில் அபய முத்திரையுடன் காட்சி அளிக்கிறாள் . கற்பகிரகத்தின் முன் காலச் சக்ரம் ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது . தமிழ் உட்பட வட மொழி எழுத்தும் இதில் பொறிக்கப்பட்டுள்ளது

வெள்ளி சனி ஞாயிறு செவ்வாய் அமாவாசை பெளர்ணமி போன்ற நாட்களில் இங்கு வழிபடுவது சிறப்பு . குறிப்பாக அமாவசை பெளர்ணமி நாட்களில் கூட்டம் மிக அதிகமாக இருக்கும் . இந்த கோயிலில் 11 முறை இடமும் வலமுமாக சுற்றி விட்டு விளக்கு மண்டபத்தில் காலா தேவிக்கு அபிஷேகம் செய்யபட்ட நெய்யால் 11 விளக்கு ஏற்றி பின்பு கருவறை முன்பு உள்ள காலச் சக்கரத்தில் நின்று 11 நிமிடம் தேவியை பார்த்து வேண்டுதல்களை செய்தால் பிரச்சனைகள் குறைந்து வாழ்வு வளம் பெறும் ..

Next Story
கதிர் தொகுப்பு
Trending News