தடைப்பட செயல்கள் இனிதே நடைபெற வழிபட வேண்டிய தெய்வம்!
ஒரு செயலை செய்யும் பொழுது தடை ஏற்பட்டால் அது மீண்டும் நல்ல முறையில் நடைபெற வழிபட வேண்டிய தெய்வம்.
By : Bharathi Latha
சுகந்த குந்தளாம்பிகை என்ற தெய்வத்தை வழிபடுவதன் மூலமாக தடைபட்ட செயல்கள் இனிதே நடைபெறும். குறிப்பாக திருமண தடைகள் அனைத்தும் நீங்கி விரைவில் திருமணமாகும் சுகத்தையும் பெறலாம். திருவாப்புடையார் கோவிலில் வீற்றிருக்கும் தெய்வம் தான், பல்வேறு தடைகளையும் தாண்டி ஒரு செயல்களை நல்ல முறையில் சுமுகமாக முடிவதற்கு வழி வகுக்கும். மேலும் இது பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட நான்காவது கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
பல்வேறு அம்மன் கோயில்களில் இல்லாத சிறப்பு இந்த கோவிலில் அம்மனுக்கு உண்டு. மேலும் இந்தக் கோவிலில் இறைவனுக்கு நெய்விளக்கு ஏற்றி வழிபடுவதன் மூலமாக நீங்கள் ஆயிரம் பசுக்களுக்கு உணவளிக்கும் பலனைப் பெறலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்து கடவுளை இளநீர் கொண்டு வழிபாடு செய்வதன் மூலமாக அசுவமேத யாகத்தை செய்து அதற்கான பலனை நீங்கள் பெறலாம் என்று கூறப்படுகிறது. பல்வேறு தவறுகளைச் செய்த அனைத்தையும் இழந்த வலிமையற்றவர்கள் இங்கு வந்து வழிபடுவதன் மூலமாக நீங்கள் இழந்த அனைத்தையும் திரும்பப் அடைய முடியும் என்பதும் இந்த கோவிலில் உள்ள மற்றொரு சிறப்பம்சம்.
மேலும் செவ்வாய் தோசம் உடையவர்கள் இங்கு உள்ள முருகனை வழிபடுவதன் மூலமாக தோஷத்தை நீக்குவதற்காக பரிகாரமும் செய்யப்படுகிறது. மேலும் திருவாப்புடையார் கோவில் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் பல்வேறு திசைகளில் இருந்தும் பக்தர்கள் கூடுவதற்கு காரணமான ஒன்றாக இருந்து வருகிறது.
Input & image courtesy: Malaimalar news