Kathir News
Begin typing your search above and press return to search.

குபேரரின் அருளை பெற வெற்றிலையை பயன்படுத்துவது எப்படி?

குபேரரின் அருளை பெற வெற்றிலையை பயன்படுத்துவது எப்படி?
X

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  23 Sep 2022 12:45 AM GMT

வெற்றிலை தெய்வ அம்சம் பொருந்திய ஒரு இலையாகும் . பொதுவாகவே இலைகளுக்கு எப்போதுமே ஆகர்ஷண சக்தி உண்டு அரச இலை மாவிலை போன்றவை தெய்வீக ஆற்றல் பெற்றவை . வெற்றிலை என்பது இவை எல்லாவற்றையும் விட அதீத சக்தி பெற்றது .

கண்களுக்கு தெரியாத பொருளை மைபோட்டு பார்ப்பது , வசியம் செய்வது போன்றவற்றிற்கு வெற்றிலையை அதிகம் பயன்படுத்துவார்கள் . இந்த வெற்றிலைக்கு செல்வத்தின் தலைமகளாக உள்ள மகாலஷ்மியை ஈர்க்கும் ஆற்றல் உண்டு. மேலும் தீய கர்ம வினைகளையும் இந்த வெற்றிலை அழிக்கும் . செல்வமின்மையும் நமது மோசமான கர்மா தான் இவை எல்லாவற்றையும் நிவர்த்தி செய்ய வெற்றிலையை பயன்படுத்தலாம்.

வெற்றிலைக்கு உள்ள தனித்துவமே அது நம்மிடம் இருந்தாலே நமக்கு நன்மையை செய்யும் . வெற்றிலையை விட வெற்றிலை காம்பிற்கு ஆகர்ஷண சக்தி அதிகம் . அதன் சாறை கொண்டும் நிறைய பரிகார முறைகள் செய்யலாம் . நாம் தற்போது செய்யும் வழிபாட்டு பரிகாரத்தை பார்ப்போம் .

வெற்றிலையில் வழிபாட்டிற்கு உகந்த வெற்றிலை என்று சில து உண்டு . வெற்றிலை மூன்று வகைபடும் ஆண் வெற்றிலை மற்றும் பெண் வெற்றிலை . இது இல்லாமல் இரண்டு மற்ற தன்மையுடைய வெற்றிலையும் உண்டு அதை தான் நாம் வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் . ஆண் வெற்றிலையில் வலது புறம் இலை அதிகமாகவும் வெற்றிலை காம்பின் ஒரு புள்ளியில் இருந்து நரம்புகள் படர்வதாக இருக்கும் . பெண் வெற்றிலையில் இடது பக்கம் இலை அதிகமாகவும் வெற்றிலை காம்பின் பல பகுதிகளில் இருந்து நரம்புகள் படர்வதாக இருக்கும் . இது இரண்டும் இல்லாத வெற்றிலையாக 5 எடுத்துக் கொண்டு

மஞ்சளில் நனைத்த காட்டன் துணியில் இந்த 5 வெற்றிலைகளையும் அதோடு சேர்த்து 11 ஏலக்காய் 11 அட்சதை கொஞ்சம் மஞ்சளில் நனைத்த அரிசியான அட்சதை வைத்து அதை துனியில் மடித்து ஓம் ஸ்ரீம் மகாலஷ்மியை சுவாஹா என்கிற மந்திரத்தை சொல்ல வேண் டும். பிறகு மரத்தினாலான பணப் பெட்டியில் இதை வைக்கலாம் . இதை மூடும் முன்பதாக " ஓம் ஸ்ரீம் யக்ஷாய குபேராய வைஷ்ரவைாய தன தான்யா திபதியே தன தான்ய சம்ரித்திம்மே தேஹி தாபய ஸ்வாகா " என்கிற மந்திரத்தை சொல்லி மூடி விடவும் . இதை ஒருமுறை செய்தால் பண கஷ்டம் நீங்கும்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News