Kathir News
Begin typing your search above and press return to search.

நீரினால் செய்யப்பட்ட லிங்கம் இருக்கும் அதிசய ஜம்புகேஸ்வரர் ஆலயம் !

நீரினால் செய்யப்பட்ட லிங்கம் இருக்கும் அதிசய ஜம்புகேஸ்வரர் ஆலயம் !

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  27 Nov 2021 12:30 AM GMT

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது ஜம்புகேஸ்வரர் கோவில். புகழ்பெற்ற சைவ திருத்தலங்களுள் ஒன்று. சிவபெருமானின் புகழ் பெற்ற பஞ்ச பூத ஸ்தலங்களுள் இது முக்கியமானது. இது நீரை குறிக்கும் கோவிலாகும். 275 தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களுள் இதுவும் ஒன்றாகும்.

ஒருமுறை சிவபெருமானின் தவத்தை அம்பாள் கலைத்ததாகவும் இதனால் சினமுற்ற சிவபெருமான் அம்பிகையை பூலோகம் செல்லுமாறு சாபமிட்டார். அதன் படியே அம்பிகை திருவானைக்காவில் உள்ள வெண் நாவல் மரத்தடியில் காவிரி நீரால் ஆன லிங்கத்தை வடித்து தவமியிற்றினார். அப்பு லிங்கம்(நீராலான லிங்கம்) என பெயர். இதனாலேயே இங்கிருக்கும் சிவனுக்கு சிவபெருமான் அம்பிகையின் வரத்தை மெச்சி அவருக்கு தரிசனம் தந்த இடம் இது. மற்றும் அம்பிகைக்கு சிவபெருமான் ஞான உபதேசம் செய்த இடமும் இதுவே. மேலும் இத்திருத்தலத்தில் அம்பிகை அகிலாண்டேஸ்வரி என்ற பெயரில் அருள் பாலிக்கிறார்.

இங்கு ஒரு விநோதமான சடங்கு உண்டு. அதாவது, உச்சி வேளையில் சிவபெருமானுக்கு இக்கோவிலின் அர்ச்சகர் அம்பிகை போல வேடம் தரித்து புடவை, கிரீடம் ஆகிய அம்பிகையின் பொருட்களை அணிந்து சிவனுக்கு பூஜை செய்து விட்டு கோமாதா பூஜை செய்து திரும்புவார். இந்த நிகழ்வு மேள தாளம் முழங்க நிகழ்வது பார்க்க கண் கொள்ள காட்சியாகும். அம்பிகையே நேரில் வந்து இதை செய்வதாக ஐதீகம்.

மேலும் அம்பிகை தவம் இயற்றி சிவபெருமானை இங்கு தரிசித்ததால், இங்கு பெருமானுக்கும் அன்னைக்கும் திருக்கல்யாண உற்சவம் நடப்பதில்லை. காரணம், புராணங்களின் படி சிவபெருமான் அவருக்கு காட்சி கொடுத்ததாக தான் குறிப்புகள் உண்டு மணந்ததாக இல்லை.

இக்கோவிலுக்கு ஜம்புகேஸ்வரர் என பெயர் வரக் காரணம், ஒரு முறை ஜம்பு என்ற முனிவர் சிவனை நினைத்து இங்கே தவம் இருந்தார். அவருக்கு பெருமான் காட்சி கொடுத்து அவருக்கு நாவல் பழத்தை வழங்கினார். சிவபெருமானிடம் இருந்து பிரசாதமாக கிடைத்ததால் அதன் விதையையும் அவர் விழுங்கிவிட்டார்.. அது அவருள் மரமாக வளர்ந்து அவர் சகஸ்ரஹாரம் வழியே வெளிப்பட்டு அவர் முக்தியடைந்ததாக சொல்லப்படுகிறது. எனவே தான் இந்த ஈஸ்வரருக்கு ஜம்புகேஸ்வரர் என்று பெயர்.

Image : Trip Advisor

Next Story
கதிர் தொகுப்பு
Trending News