அனுமர் எடுத்து வந்த சஞ்சீவனி குறித்த ஆச்சர்ய தகவல்கள் !
The Sanjeevani Temple
By : G Pradeep
ராமாயண காதையில் நமக்கு கிடைக்கிற அரிய தகவல்களும், பொக்கிஷங்களும் ஏராளம். அந்த வகையில் அனுமர் எடுத்து வந்த சஞ்சீவனி குறித்த ஆச்சர்ய தகவல்கள் இங்கே. மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டிருந்த போரின் போது, ராவணனின் மகனான மேகநாதனுக்கும், இலட்சுமணருக்கும் இடையே கடுமையான போர் நிகழ்ந்தது. அப்போது மிகவும் கொடிய அம்பு இலட்சுமணரை தாக்க, இராமரும் கலங்கி நிற்க. அனுமர் இலங்கையின் அரச மருத்துவரான சுஷேனரை சந்தித்து அலோசித்தார்.
மருத்துவர் அனுமரிடம் இலட்சுமணரை காக்க வேண்டுமெனில், உடனடியாக துரோணகிரி மலைக்கு சென்று அங்கிருக்கும் நான்கு முக்கிய மூலிகைகளை எடுத்து வர வேண்டும் என்றார். முருத்த சஞ்சிவினி ( உயிர் காக்க), விசல்யகாரணி ( அம்பு தோய்த்த வலியை போக்க) , சந்தனகாரணி ( தோல் சிகிச்சைக்கு) சவர்ன்யகாரணி ( தோலின் நிறத்திற்காக)
இதன் பின் துரோணகிரிக்கு சென்ற அனுமர், அங்கிருந்த மூலிகைகளை கண்டு பிரமித்து போனார். அங்கே ஏராளமான மூலிகைகள் இருந்தன, இதில் அந்த நான்கு மூலிகைகள் எது என்பதை அவரால் உணர இயலவில்லை. எனவே அந்த மலையையே பெயர்த்தெடுத்து வந்தார். அதன் பின் இலட்சுமணர் உயிர் மீண்டார் என்பது புராணம். இதில் எழும் கேள்வி, இதில் வரும் சஞ்சிவினி மலை என்பது வெறும் புனைவா? அல்லது நிஜத்திலும் உண்டா என்பது தான்.
புராணங்களை பொருத்த வரை சஞ்சிவினி என்பது அற்புத வல்லமை கொண்ட மூலிகை. இதனை கொண்டு எந்த கொடிய நோயையும் விரட்ட முடியும். இறந்த மனிதர்களை கூட உயிர்பிக்கும் தன்மை இந்த அரிய தெய்வீக மூலிகைக்கு உண்டு என்பது நம்பிக்கை.
சஞ்சிவினி என்பதை ஆங்கிலத்தில் Selaginella bryopteris என்கின்றனர் இதன் உண்மை தன்மை குறித்த ஆய்வுகள் நடந்தவண்ணம் உள்ளன. துளசி, மல்லி இலை, புதினாவை போல இதுவும் அரிய நற்குணங்கள் படைத்த மூலிகை என்கின்றனர். இன்றும் கூட பல ஆய்வாளர்கள், நிபுணர்கள் உண்மையில் சஞ்சிவினி என்பது எந்த செடி என்பதை ஆராய்ந்து வருகின்றனர். இந்த மூலிகையை குறித்து சுஷேசனர் அனுமருக்கு விளக்கிய போது இவ்வ்வாறு சொன்னாராம் "இமய மலையில் கைலாசத்திற்கும் ரிஷப மலைக்கும் இடையே இருக்கும் மலையில் உயிர் காக்கும் அரிய மூலிகை உண்டு. அவை ஒளிரும் தன்மை கொண்டது என்றாராம். "
அதனடிப்படையில் ஒளிரும் தன்மை கொண்ட செடிவகைகள் சஞ்சிவினியாக இருக்கலாம் என்ற வகையில் ஆய்வுகள் நடந்து வருகின்றன.
Image : Dajiworld