Kathir News
Begin typing your search above and press return to search.

சனி பகவானின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு சனி விரதம் இருப்பது எப்படி ?

சனி பகவானின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு சனி விரதம் இருப்பது எப்படி ?

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  23 Oct 2021 12:45 AM GMT

சனிக்கிழமை விரதம் என்பது மற்ற நாட்களில் நாம் இருக்கும் விரதங்களை விடவும் மிகவும் நன்மை பயப்பதாக சொல்லப்படுகிறது. நமக்கு ஏற்படும் தீய விளைவுகளிலிருந்து தப்பவும், சனி பகவானின் அருளை பரிபூரணமாக பெறவும் இந்த விரதம் உதவுகிறது. சனிக்கிழமை விரதம் என்பது 11 வாரங்கள் தொடங்கி 51 வாரங்கள் வரை மேற்கொள்வார்கள்.

சனிபகவானை எண்ணி விரதம் இருக்கும் அந்த நாளில், அதிகாலை எழுந்து நீராடி நீலம் அல்லது கருப்பு நிற உடை அணிவது உகந்தது. மேலும் இரும்பினால் ஆன சனி பகவான் திருவுருவச் சிலையை வணங்குவது மிகுந்த நன்மை தரும். பூஜையின் போது கறுப்பு நிற துணி, கறுப்பு நிற எள்ளு, கறுப்பு நிற அரிசி ஆகியவற்றை சனி பகவானுக்கு படைப்பது மிகுவும் உகந்ததாகும். இந்த பூஜையை சனி பகவான் மீதான மந்திர உச்சாடனையுடன் நிறைவு செய்யலாம்.

இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் அருகிலிருக்கும் அனுமர் கோவில் அல்லது பைரவருக்கு அர்பணங்களை வழிபாடுகளை அளித்து விட்டு சனி பகவானுக்கு எள்ளு எண்ணை அகியவற்றை சாற்றி வழிபாடு செய்வது வழக்கம். அந்த வழிபாட்டுக்கு பின்னரே உணவினை எடுத்து கொள்ள் வேண்டும் என்பது ஐதீகம். ஒரு முறை ஒன்பது கிரகங்களுக்கும் தன்னில் யார் சிறந்தவர் என்ற வாக்குவாதம் வந்ததாகவும் இதற்கு தீர்வு காண இந்திரனை அணுகியுள்ளனர். சூழலை கண்டு திகைத்த இந்திரன் அவர்களை உஜ்ஜைனின் அரசனான விக்ரமாதித்தியனிடம் செல்லுமாறு அறிவுருத்தியுள்ளார்.

விக்ரமாதித்தியன் அவர்களுக்கு தங்கம், வெள்ளி, செம்பு என நவ ரத்தினங்களால் ஆசனம் அமைத்து அமர சொல்லியுள்ளார். வரிசைப்படி நவ கோள்களும் அமர்ந்து வரவே, இறுதியில் சனி பகவான் இரும்பு ஆசனத்தில் அமர்ந்துள்ளார். இந்த ஆசனமே அவரவரின் இடத்தை சொல்லும் என சொல்லவும். சனி பகவான் தான் இறுதியாக இருப்பதை உணர்ந்து கோபமுற்றார். இதனால் சனி தோஷத்திற்கு ஆளான விக்ரமாதித்தியன் பல இன்னல்களை சந்தித்தார். சனி பகவானின் முக்கியத்துவத்தை உணர்ந்த அவர் ஏழரை ஆண்டுகளுக்கு சனி பகவானின் பரிபூரண அருளை பெறுவதற்காக தொடர்ந்து சனி விரதம் இருந்தார் என்பது புராணங்களில் சொல்லப்படும் குறிப்பு.

இந்த நாளில் விரதம் இருப்பதால் முதுகு வலி, தசை வலி, போன்ற புற நோய்களிலிருந்தும் அழுத்தம் போன்ற மனரீதியான பிரச்சனைகளிலிருந்தும் விடுபடுவதாக சொல்லப்படுகிறது.

நன்றி : ஸ்பீக்கிங் ட்ரீ

Next Story
கதிர் தொகுப்பு
Trending News