Kathir News
Begin typing your search above and press return to search.

நம் மரபில் வாழைமரத்தை வாயிலில் கட்டுவது ஏன்?அதன் ஆன்மீக முக்கியத்துவம்

நம் மரபில் வாழைமரத்தை வாயிலில் கட்டுவது ஏன்?அதன் ஆன்மீக முக்கியத்துவம்

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  20 Jan 2022 3:08 AM GMT

தொழில்நுட்ப ரீதியாக பார்த்தால் வாழை மரம் வகையை சேர்ந்தது இல்லை என்ற பேச்சு இருந்தாலும் அதனுடைய வடிவம் மற்றும் அளவை வைத்து வாழை மரம் என்றே அழைக்கிறோம். அதே வேளையில் வாழை மரம் என்பது நம் இந்து மரபில் புனிதமான மரமாக கருதப்படுகிறது. பூஜை, நல்ல விஷேசம், பரிகாரம் போன்றவைகளின் முக்கிய இடம் வகிக்கிறது.

காரணம் பொதுவாக சொன்னால் வாழையின் தன்மை தான். அது ஒன்று இரண்டு என்றில்லாமல், அதனுடைய மொத்த பாகமும் அனைவருக்கும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது. உதாரணமாக அதனுடைய தண்டு பகுதி, இலை, பூ, பழம் என அனைத்துமே மனித இனத்திற்கு பலன் தருகிறது.

பண்டைய கால புராணங்களின் படி வாழை மரம் என்பது குரு பகவானான பிரகஸ்பதிக்கு உகந்ததாகும். வீட்டில் வாழை அல்லது வாழை மரம் இருந்தால் அது குரு பகவானே வீட்டில் இருந்ததற்கு சமம் என்பது ஐதீகம். அனைத்து விதமான இந்து சடங்குகளுக்கும் வாழை இலையே பிரதானமாக படைக்கப்படுகிறது. மிக எளிமையாக கிடைக்க கூடிய பழம் என்றாலும் அதிலிருக்கும் சத்துக்கள் எண்ணிலடங்காதது. ஒரு பழத்திலேயே 100 கலோரி ஆற்றல் இருக்குமெனில் அது வாழை அன்றி வேறில்லை.

குரு பகவான் மற்றும் மஹா விஷ்ணுவின் அம்சமாக கருதப்படும் இந்த வாழை மரத்தை விஷேச வீடுகளில் கட்டுவது வழக்கம். அதுமட்டுமின்றி விஷேசம் முடிந்து திரும்புபவர்களுக்கும், குருவிற்கு தக்‌ஷணை கொடுக்கும் போது பொருள் ரீதியான தக்‌ஷணையை கொடுக்க முடியாதவர்கள் கூட இரண்டு வாழையை வைத்து கொடுத்தால் போதுமானது என்பார்கள்.

இறைவனுக்கு வாழையை அர்பணித்தால் மகிழ்ச்சியான வாழ்வும் பொருளாதார நிறைவும் ஏற்படும் என்பது ஐதீகம். அதுமட்டுமின்றி மாங்கல்ய தோஷம் இருக்கும் ஜாதகர்கள், தோஷம் போக்க வாழை மரத்திற்கு பரிகாரம் செய்வார்கள். இந்த பரிகாரம் முடிந்த பின் அவர்களின் திருமண தடை நீங்கும் என்பது முன்னோர்களால் சொல்லப்பட்டது.

நிறைந்த வாழை மரத்தை வணங்குவது பரிபூரண இலட்சுமியை வணங்குவதற்கு சமம். அனைவருக்கும் அனைத்தையும் நல்கும் பண்பு நிறைந்தது வாழை என்பதாலேயே அதற்கு ஆன்மீகத்திலும், நம் மரபிலும் முக்கிய இடம் வழங்கப்பட்டது.

Image : BAnglore daily

Next Story
கதிர் தொகுப்பு
Trending News