Kathir News
Begin typing your search above and press return to search.

ஆன்மீக பாதையில் வெங்காயமும் பூண்டும் தவிர்க்கப் பட வேண்டிய உணவா?

ஆன்மீக பாதையில் வெங்காயமும் பூண்டும் தவிர்க்கப் பட வேண்டிய உணவா?
X

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  15 March 2023 12:16 AM GMT

இன்று ஓர் எளிமையான சமையலை செய்ய வேண்டும் என்றாலும் வெங்காயமும், பூண்டும் இன்றியமையாத பொருட்களாக உள்ளது. அவற்றின் எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள் அனைவரும் அறிந்ததே. அவற்றின் மணமும் ருசியும் இந்திய சமையல் கலையில் யாராலும் நிராகரிக்க முடியாதவை. ஆனால் நம் ஆயுர்வேதத்தில் வெங்காயத்தையும், பூண்டையும் சற்று விலக்கியே வைத்துள்ளனர்.

இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றே சொல்லலாம். ஆயுர்வேதம் இந்த இரு பொருட்களை விலக்கி வைக்கவில்லை, மாறாக இவைகளை இரத்தத்தை தூய்மைப்படுத்தும் பொருட்களாகவே அது கருதுகிறது. அதுமட்டுமின்றி வாயு தொல்லைகளை போக்குவதற்கு பூண்டின் மருத்துவ குணங்கள் ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இங்கே விலக்கி வைக்கப்படுவதென்பது அதன் அதீத பயன்பாட்டை தான்.

ஆன்மீக ரீதியாக ஆற்றல்களை மூன்று வகையாக பிரிக்கின்றனர் தாமசம், சாத்வீகம் மற்றும் ரஜோ குணம். இதில் தாமச குணம் நிறைந்த உணவினை உண்டால் உடல் மந்த தன்மை அடையும், ரஜோ குணம் மிக்க உணவினை உண்டால் உடல் உஷ்ணம், சீற்றம் பெறும் எனவே ஆன்மீக சாதனாவில் இருப்பவர்களுக்கு சாத்வீக குணம் நிறைந்த உணவுகளே பரிந்துரைக்கப்பட்டன.

உடலுக்கு உஷ்ணம் தேவை தான், அதற்காக அதீத உஷ்ணம் பல ஆரோக்ய சீர்கேட்டினை உண்டாக்கும். எனவே ஆன்மீக பாதையில் இருப்பவர்களும், ஆயுர்வேத உணவுகளை உண்பவர்களும் இரண்டும் ஒன்று என்று குழப்பி கொள்கிறார்கள். இரண்டும் வேறு, ஆனால் ஆன்மீகத்தில் நாம் முன்னேற்றம் அடைய ஆயுர்வேத உணவுகளை உட்கொள்வது நல்லது, மேலும் ஆன்மீகத்திற்குரிய உணவுகளை உட்கொள்வதும் சிறந்தது

அந்த வகையில் வெங்காயமும், பூண்டும் ஒருவருக்குள் இருக்கும் சீற்றத்தை அதிகரிக்க கூடும் கோபமாக, எரிச்சல், ஆசை போன்றவைகளை அதிகரிக்கும் என்பதால் தியானத்தில் ஈடுபடுபவர்களின் கவனத்தை இது சிதைக்க கூடும் அதனால் ஆன்மீக பாதையில் இருப்பவர்கள் இந்த இரண்டையும் பெரும்பாலும் தவிர்ப்பார்கள் மற்றும் விரதமிருப்பவர்கள் இதை தவிர்ப்பார்கள்.

மனதினை அமைதியாக ஒரு நிலையில் வைக்க உடலின் ஒத்திசைவு அவசியம். உடலினை ஆரோக்கியத்துடனும் அமைதியுடன் வைத்திருக்க அதற்குரிய உணவுகளை உண்பது அவசியம். அதற்காகவே இந்த இரு உணவினை தவிர்த்தனர்.

ஆன்மீக பாதையில் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவில் வெங்காயமும் பூண்டும் இருப்பது ஏன்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News