இந்திய அணியில் மற்றொன்று தடுமாற்றமா.. முன்னாள் பயிற்சியாளர் கூறியது என்ன...
உலகக்கோப்பைத் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
By : Bharathi Latha
உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் காரணத்தினால் பலரும் இந்தியா வீரர்கள் நம்முடைய சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு அவர்கள் பழகி இருப்பார்கள். எனவே நிச்சயம் இந்தியா இந்த போட்டியில் வெல்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த ஒரு சமயத்தில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சாஸ்திரி கருத்து ஒற்றை தெரிவித்து இருக்கிறார். இது பற்றிய அவர் கூறும்பொழுது, இந்திய அணியின் டாப் ஆர்டரில் நிச்சயம் இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஏனென்றால் டாப் 6 பேட்டிங் வரிசையில் 2 இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்கும் போது, இந்திய அணி சரியான பேலன்ஸை கொண்டு வர முடியும். இந்திய வீரர்கள் ரிஷப் பந்த் காயம் காரணமாக விளையாட முடியாத சூழல் உள்ளது. ஆனால் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமில்லை. பல்வேறு வீரர்களும் இடது கை பேட்ஸ்மேன் ஆக இருக்கிறார்கள். அவர்களை அணிக்குள் கொண்டு வர வேண்டும்.
இந்திய வெள்ளைப்பந்து அணியில் இடம்பிடிப்பதற்காக ஏராளமான வீரர்கள் திறமையுடன் காத்திருக்கிறார்கள். இவர்களில் உலகக்கோப்பைக்குள் தயார் செய்வதே இந்திய அணியின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
Input & Image courtesy: Newsl