ஆசிய கோப்பை போட்டியில் 6 சிக்ஸர் எடுத்த ஆப்கான் வீரர்: யார் இந்த நஜிபுல்லா?
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆறு சிக்ஸர் எடுத்து ஆப்கானிஸ்தான் வீரர் நஜிபுல்லா.
By : Bharathi Latha
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜா சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் நேற்று வங்காளம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. இதில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றி நாயகன் ஆக தற்போது நஜிபுல்லா அவர் விளங்குகிறார். காரணம் இருக்கிறது ஏனென்றால் வங்காளத்திற்கு எதிரான ஆட்டத்தின் போது ஆறு சிக்சர்களை சும்மா அசால்ட் ஆக எடுத்த பெருமை குரிய ஆப்கானிஸ்தான் வீரர் நஜிபுல்லா ஹார்டன்.
ஷார்ஜா மைதானம் அளவில் சிறியதாக இருந்தாலும் ஆடுகளம் மிகவும் குறைவாகவே இருந்தது. இதனால் இந்த ஆடுகளத்தில் ரன் எடுப்பது மிகவும் சவாலான விஷயமாகவே இருந்தது. வங்கதேசம் நிர்ணயித்த 128 ரன்கள் என்ற இலக்கை தொட முடியாமல் ஆப்கானிஸ்தான் திணறியது. ஆனால் கடைசி நேரத்தில் வீரர் 60களை எடுத்து சூப்பர் 4 தகுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்கள். 17 பந்துகளில் சுமார் 43 ரன்களை எடுத்துள்ளார் உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் வீரர் ஆக்கவும் மாறியுள்ளார்.
T20 கிரிக்கெட்டில் 5வது அதற்கு கீழ் பேட்டிங் வரிசையில் இறங்கி ஆயிரம் ரன்கள் மற்றும் 140 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள உலகில் ஒரே வீரர் நஜிபுல்லா மட்டும் தான். இவருக்கு அடுத்ததாக வீரர் டேவிட் மில்லர், பொலார்ட், பெரோரா, தோனி அவர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இவ்வளவு சாதனைகளை படைத்தும் இவரை ஒரு முறை கூட ஐபிஎல் அணியில் ஏலத்திற்கு எடுத்ததே கிடையாது.
Input & Image courtesy: News