உலக கோப்பை சாம்பியன் வென்ற பட்டத்தை ஆஸ்திரேலிய அணி.. இந்திய ரசிகர்கள் பெரும் சோகம்..
By : Bharathi Latha
உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலிய அணி ஆறாவது முறையாக வென்று இருக்கிறது. இதன் மூலம் 12 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி தவற விட்டிருக்கிறது. இந்த தொடரில் ஒரு தோல்வியை கூட பெறாமல் தொடர்ந்து பத்து போட்டிகளில் ஆடிய இந்திய அணி கடைசியாக வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோல்வியை தழுவி இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
இந்த போட்டியில் இந்தியா தோற்றத்திற்கு காரணம் ஆடுகளம் மோசமான முறையில் அமைக்கப் பட்டது என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து பத்து போட்டிகளில் இந்திய அணி ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடிவிட்டு கடைசியில் இதுபோல் ஒரு மோசமான ஆடுகளத்தில் விளையாடியதால் தான் இந்திய அணி தோற்றதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்த வருகின்றனர்.
இது மட்டுமல்லாமல் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல் முதல் சுற்றில் வெளியேறிய 6 அணிக்கு தலா 83 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டிருக்கிறது. இதை போல் லீக் சுற்றில் வெற்றி பெற்ற ஒவ்வொரு அணிக்கும் ஒரு வெற்றிக்கு தலா 33 லட்சம் ரூபாய் என்ற பரிசுத்தொகை தனியாக வழங்கப்படுகிறது. அது படி பார்த்தால் இந்திய அணிக்கு தனியாக மூன்று கோடி ரூபாய் கிடைத்திருக்கும்.
Input & Image courtesy: News