ஈட்டி எறிதல் போட்டி, இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வாரா ?
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் இந்தியாவுக்காக பதக்கத்தை வென்று வருவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருவது நீரஜ் சோப்ராவும் ஒருவர் ஆவார்.
By : Thangavelu
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் இந்தியாவுக்காக பதக்கத்தை வென்று வருவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருவதில் நீரஜ் சோப்ராவும் ஒருவர் ஆவார்.
இந்நிலையில், இன்று காலை (ஆகஸ்ட் 4) ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றறது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டு, தனது முதல் வாய்ப்பில் 86.65 மீட்டர் தூரம் எறிந்து அசத்தியுள்ளார்.
இதன் மூலம் அவர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதனால் வருகின்ற ஆகஸ்ட் 7ம் தேதி நடைபெறுகின்ற ஈட்டி எறிதலுக்கான இறுதி போட்டியில் கலந்து கொள்கிறார். அதில் வெற்றி பெற்றால் அவருக்கு தங்கப்பதக்கம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்தியர்கள் அனைவரும் நீரஜ் சோப்ராவுக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Daily Thanthi
Image Courtesy: ட்விட்டர்
https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/04064817/Olympics-Javelin-thrower-Neeraj-Chopra-qualifies-for.vpf