Begin typing your search above and press return to search.
கள்ளக்குறிச்சி: சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கி பறவைகளை வேட்டையாடும் கும்பலை தூக்கிய போலீஸ்!

By :
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக ஆன்லைன் மூலமாக துப்பாக்கிகளை வாங்கி வனப்பகுதியில் மிகவும் அறியவகை பறவைகளை வேட்டையாடியதாக மூன்று பேர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், செம்பியன்மாதேவி பகுதியில் உள்ள வனத்திற்கு போலீசார் சென்றுள்ளனர். அப்போது துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதன் பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வாங்கி வந்து பறவைகளை வேட்டையாடியதாக கூறியுள்ளனர். அதன் எறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்டின், ஸ்டீபன், ரிஜிஸ் என்பதும் தெரியவந்துள்ளது. அவர்கள் பறவைகள் மட்டும்தான் வேட்டையாடினார்களா அல்லது மற்ற வனவிலங்குளையும் வேட்டையாடினார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source, Image Courtesy: Polimer
Next Story