கங்கைகொண்ட சோழபுரத்தில் ஸ்ரீ ராஜேந்திர சோழனது திருவுருவபடமில்லாமல் ஜெயந்தி விழா! - இந்து முன்னணி கடும் எதிர்ப்பு!
By : Dhivakar
அரியலூர்: நேற்று(26-7-2022) சோழ மாமன்னர் ராஜேந்திர சோழனது ஜெயந்தி விழா, கங்கைகொண்ட சோழபுரத்தில் கொண்டாடப்பட்டது.
நேற்று ஆடி திருவாதிரையை முன்னிட்டு, சோழ மாமன்னர் ஸ்ரீ ராஜேந்திர சோழனின் ஜெயந்தி விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் ராஜேந்திர சோழன் ஆண்ட சோழ நாட்டின் தலைநகரமான கங்கைகொண்ட சோழபுரத்தில், அவரது ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும் என்று எண்ணி, நேற்று பொதுமக்கள் கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு சென்றனர். ஆனால் அங்கு மாமன்னரின் திருவுருவப்படம் இல்லாமல், அவருக்கு ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்து முன்னணி வெளியிட்ட செய்திக்குறிப்பில்:
இன்று கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா ஆடி திருவாதிரையை முன்னிட்டு, இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் மாமன்னர் ராஜேந்திசோழன் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய முற்பட்டபோது. யாருக்கு விழா நடக்கிறதோ அவரின் திருவுருவ படம் எங்கும் மக்கள் பார்வைக்கு வைக்கபடவில்லை.
இது குறித்து கோவில் EO அவர்களிடம் கேட்டபோது "இந்தாண்டு முதல் முறை என்பதால் மறந்துவிட்டோம் அடுத்தாண்டு கண்டிபாக ராஜேந்திர சோழன் அவர்களின் திருவுருவ படம் வைப்போம்" என அலட்சியமாக பதில் அளித்தார். பின் தர்னாவில் ஈடுபட்டபோது "நாளை நிச்சயமாக மக்கள் பார்வைக்கு ராஜேந்திரசோழன் திருவுருவ படம் வைக்கப்படும்" என உறுதியளித்தார்.