Kathir News
Begin typing your search above and press return to search.

சிவகங்கையில் கெளரி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலம் மீட்பு!

சிவகங்கையில் கெளரி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலம் மீட்பு!

ParthasarathyBy : Parthasarathy

  |  19 Jun 2021 3:09 PM GMT

சமீபமாக சென்னை வடபழநி முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ. 300 கோடி மதிப்புள்ள ஆக்கிரமித்த நிலங்களை ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மீட்டனர். இந்த நிலையில் தற்போது சிவகங்கையில் கெளரி விநாயகர் கோயிளுக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலத்தை ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டு, அங்கு கட்டப்பட்டிருந்த கட்டடத்திற்கு சீல் வைத்தனர்.


சிவகங்கையில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கெளரி விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலம், தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிராங்கால் கிராமத்தில் அமைந்துள்ளது. கோயிலுக்கு சொந்தமான இந்த நிலத்தை பாண்டி என்பவர் ஆக்கிரமித்து வணிக வளாக கட்டடம் கட்டினார்.


இந்த கோயில் நிலம் ஆக்கிரமிப்பு குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து,ஆக்கிரமிக்கப்பட்ட இடத்திற்கு சென்ற அதிகாரிகள் நிலத்தை மீட்டு, அங்கு கட்டப்பட்ட கட்டடத்திற்கு சீல் வைத்ததுடன் இந்த நிலம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என அறிவிப்பு பலகை வைத்தனர்.

மீட்கப்பட்ட கெளரி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தின் தற்போதைய மதிப்பு 50 கோடி ரூபாய் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் கோயில் நிலத்தை அபகரித்த பாண்டி என்பவர் முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் பினாமி என கூறப்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்க படுமா என்று மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News