Kathir News
Begin typing your search above and press return to search.

கோவில்களில் மணிகள் திருட்டு கும்பலை பிடிக்கும் பொழுது உயிரிழந்த 10 வயது சிறுமி!

கோயில்களில் மணிகள் திருடியதாக பொதுமக்கள் தாக்கிய கும்பலில் சிக்கி எதிர்பாராதவிதமாக 10 வயது சிறுமி உயிரிழப்பு.

கோவில்களில் மணிகள் திருட்டு கும்பலை பிடிக்கும் பொழுது உயிரிழந்த 10 வயது சிறுமி!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  18 Nov 2022 3:11 AM GMT

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் அமைந்துள்ள தெய்வ வழிபாட்டு கோவில்களில் ஏராளமான மணிகள் இருக்கின்றன. கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்களுடைய நேற்று கடனாக இந்த கோவிலுக்கு மணியை காணிக்கையாக வழங்குகிறார்கள். இந்த கோவிலில் உள்ள பெரிய சிறிய மணிகள் சமீப காலமாக திருட்டுப் போவது அதிகமாக சம்பவமாக இருந்து வருகிறது. யார் இந்த மாதிரியான திருடுவது? என்று பொது மக்களிடம் கேள்விக்குறியாக இருந்தது.


இந்த நிலையில் கோவில்களில் மணிகளை திருடிக் கொண்டு ஒரு கும்பல் ஆட்டோவில் தப்பி செல்வதாக அந்த பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது. இது எடுத்த அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திருட்டு கும்பலை கட்டாயம் பிடிக்க வேண்டும். இதையடுத்து, அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் சம்மந்தப்பட்ட ஆட்டோவை பின் தொடர்ந்து விரட்டிச் சென்றிருக்கின்றனர். அப்போது மக்கள் ஆட்டோவில் சென்று திருட்டு கும்பல் மீது கற்களை வீசி தாக்கினார்கள். அந்த வழியாக ஆட்டோவை பயணம் செய்த குழந்தைகள் உட்பட ஆறு பேரையும் பொதுமக்கள் சரமாரியாக தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த பொருள் நிகழ்ச்சியை வீடியோவாக வெளியிட்ட அந்தப் பகுதியை சேர்ந்த திருட்டு கும்பலின் பொதுமக்கள் எவ்வாறு தாக்குகிறார்கள்? இதில் திருடிய கும்பல் மட்டுமல்லாது அதில் பயணம் செய்த குழந்தைகள் உட்பட பலரும் காயமடைந்து இருக்கிறார்கள். இது பற்றி தகவல் தெரிந்த போலீசார் காயமடைந்த அனைவரையும் மீட்ட புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதில் 10 வயது சிறுமிக்கு பலத்த காயும் ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அந்த சிறுமி தற்போழுது உயிரிழந்திருக்கிறார்.

Input & Image courtesy: Vikatan News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News