விலை உயர்வால் ஆவின் பால் விற்பனை குறைவு - பொங்கலுக்கு நெய்யாக்க முடிவு!
விலை உயர்வு காரணமாக ஆவின் பால் விற்பனை குறைவு,இதன் காரணமாக ஆவின் பால் பொங்கலுக்கு நெய்யாக மாற்ற முடிவெடுக்கப் பட்டுள்ளது.
By : Bharathi Latha
தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை சற்று குறைவாகவே இருந்து வருகின்றது. ஏனெனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தமிழகம் முழுவதும் ஆவின் பால் விற்பனை விலையை தமிழக அரசு உயர்த்தி அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்ப தலைவிகளும் ஆவின் பால் விலையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்தார்கள். இருந்தாலும் தற்போது வரை விலை அதிகமாக தான் இருந்து வருகிறது. இதனால் விற்பனையும் மந்தமாக இருக்கிறது.
ஆவின் பாலில் உள்ள பாலின் கொழுப்பு தரத்தின் அளவைப் பொறுத்து ஆரஞ்சு, பச்சை, சிவப்பு, நிலம் ஆகிய பாக்கேடுகளில் விற்பனை செய்யப்படுகின்றது. ஆரஞ்சு பாக்கெட் 24 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. சிவப்பு நிறம் பாக்கெட் 30 ரூபாயிலிருந்து 34 ரூபாயாக, அறிவித்த லிட்டருக்கு 12 ரூபாய் ஆக உயர்த்தி இருக்கிறது. இதன் காரணமாக ஆவின் பால் விற்பனை சற்று மந்தமாகவே இருந்து வருகிறது. முன்பை விட இதன் விற்பனை சற்று குறைவாக இருக்கிறது. இதனால் விற்பனையாகாமல் இருக்கும் ஆவின் பால்கள் பொங்கல் பண்டிகைக்காக நெய்யாக்க தற்பொழுது முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
விற்பனைக்கு இன்றி தேங்கும் பாலில் இருந்து பால் பவுடர் மற்றும் வெண்ணை போன்ற பல்வேறு பொருட்கள் தயாரிக்க ஆவின் நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் பொங்கல் தொகுப்பிற்கு ஆவின் நெய் வழங்கும் முடிவு எடுக்கப்பட்டு இருப்பது, அதற்காக தற்போது தயாரிப்புக்கு இந்த மீதமாகும் பால் பாக்கெட்களை பயன்படுத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Input & Image courtesy: Dinamalar News