Kathir News
Begin typing your search above and press return to search.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் 2 நியமனம் ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தில் தற்பொழுது இரண்டு பெயரை நியமித்ததை ரத்து செய்து இருக்கிறது உயர்நீதிமன்றம்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் 2 நியமனம் ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  5 March 2023 12:43 AM GMT

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீரங்கம் குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ்நாடு அரசு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஒரு திட்டத்தின் கீழ் ஜெயபாலன், பிரபு ஆகியோரின் நியமனத்தை மதுரை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்து இருக்கின்றது. மேலும் இவர்களை ரத்து செய்து நீண்ட காலமாக பணியாற்றும் அர்ச்சகர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கார்த்திக் மற்றும் பரமேஸ்வரன் ஆகிய இருவரும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வழியாக இருக்கிறது. குறிப்பாக ஜெயபாலன், பிரபு ஆகியோர் சார்பில் ஆஜரான வக்கீல் 2021 ஆம் ஆண்டிலேயே அவர்கள் அர்ச்சர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.


ஆனால் அவர்களின் நியமனத்திற்கு எதிராக 2022 ஆம் ஆண்டில் தான் இந்த வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். இது தொடர்புடையது அல்ல என்று வாதாடி இருக்கிறார். ஆனால் முடிவில் நீதிபதிகள இது பற்றி கூறுகையில், குமரவயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரபு மற்றும் ஜெயபாலன் இருவரையும் தமிழக அரசுதான் அச்சகர்களாக நியமித்து இருக்கிறது. இந்த நியமனம் குறித்து மனுதாரர் கேள்வி எழுப்பி இந்த வழக்கை தொடர்ந்து இருக்கிறார். மனுதாரர்களுக்கு அர்ச்சகர் பணிக்கு விண்ணப்பித்து இருந்தனர், ஆனால் அவர்கள் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.


இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர்கள் பல ஆண்டுகளாக அர்ச்சகர்களாக கோவிலில் பணியாற்றி இருக்கிறார்கள். அவர்களை முறைப்படி அர்ச்சகர்களாக கோவில் அறங்காவலர்கள் நியமிக்கவில்லை. தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கோவில்களில் பல அர்ச்சகர்கள் சம்பளம் பெறாமலேயே தங்களுடைய பணிகளை செய்து வருகிறார்கள். எனவே பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவரை நியமிப்பது தொடர்பாக கோயில் அறங்காவலர்கள் குழு 8 வாரத்தில் பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.

Input & Image courtesy: Oneindia News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News