மாணவியை மதமாற்றம் முயற்சியில் ஈடுபட்ட திருப்பூர் அரசு பள்ளி ஆசிரியைகளிடம் விசாரணை!
By : Thangavelu
திருப்பூர் ஜெய்வாய்பாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்த மாணவியை கிறிஸ்தவ மதமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வந்த அரசு பள்ளி ஆசிரியைகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி வகுப்பறைக்கு நெற்றியில் திருநீறு மற்றும் கழுத்தில் ருத்திராட்சம் அணிந்து வந்துள்ளார். இதற்கு பள்ளியில் இருந்த கிறிஸ்தவ ஆசிரியைகள் இரண்டு பேர் ருத்ராட்சம் அணியக்கூடாது, நெற்றியில் திருநீறு பூசக்கூடாது என்று கூறியுள்ளனர். மேலும், இந்து கடவுள்கள் பற்றி தவறான கருத்தையும் கூறியுள்ளனர்.
மேலும், கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவதற்கும் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மாணவி அவர்களின் பெற்றோர்களிடம் நடந்த உண்மையை கூறியுள்ளார். இது பற்றி தகவலை கேள்விப்பட்ட இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் செந்தில்குமார் தலைமையில் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அது மட்டுமின்றி ஆசிரியைகளிடம் கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் உண்மை தெரியவரும் பட்சத்தில் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என கூறப்படுகிறது.
Source: Maalaimalar
Image Courtesy:The Conversation