இடியும் நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடம் - அலட்சிய போக்கில் பள்ளிகல்வித்துறை
இடியும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தல்.
By : Bharathi Latha
திருமங்கலம் அருகே இடியும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தி உள்ளார்கள். திருமங்கலம் யூனியன் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஒன்றிய தலைவர் லதா ஜெகன் தலைமை தாங்கினார். துணை தலைவர் வளர்மதி அன்பழகன் முன்னிலையில வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் மேலும் பல நிர்வாகிகள் உட்பட 16 கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
இக்கூட்டத்தில் வரவு கணக்கு குறித்த தாக்கல் நடைபெற்றது. தொடர்ந்து கிராமங்களை கிராமங்களில் வளர்ச்சித் திட்டங்களில் குறித்த தனது வாதமும் நடைபெற்று, ஆட்டு சந்தை எடுப்பது குறித்து விவாதம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஊத்தம்பட்டியின் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்கள் பாதுகாப்பு கருதி உடனடியாக இடியும் நிலையில் உள்ள மேற்கூறையை அகற்றி விட்டு, காங்கிரீட் போட வேண்டும் என்று கவுன்சிலர்கள் ஓம் ஸ்ரீ முருகன் அவர் தெரிவித்தார்.
விரைவில் மழைக்காலங்கள் தொடங்க உள்ள நிலையில் தொற்றுநோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கொசு மருந்து அடித்தல் போன்ற பல்வேறு செயல்களை பள்ளி வகுப்பறைகளில் முன்கூட்டியே செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கூட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் தீர்த்து வைக்கப்படுவதற்கான செயல்கள் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் கைலாசம் கவுன்சிலர்களின் கோரிக்கைக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்து உள்ளார்.
Input & Image courtesy: Dinamalar News