Kathir News
Begin typing your search above and press return to search.

காந்தி ஜெயந்தி நாளில் நடந்த கிராம சபை கூட்டம் - அடித்துக்கொண்ட பஞ்சாயத்து தலைவர்கள்

தமிழக அரசு அனுமதி அளித்த கிராம சபை கூட்டம் தற்போது மோதலில் முடிந்துள்ளது.

காந்தி ஜெயந்தி நாளில் நடந்த கிராம சபை கூட்டம் - அடித்துக்கொண்ட பஞ்சாயத்து தலைவர்கள்
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 Oct 2022 4:23 AM GMT

அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழக அரசு கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி வழக்கு இருந்தது. எனவே இந்நிலையில் கடலூரில் கோட்டலாம்பாக்கத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அடிதடி மோதல் ஏற்பட்டு அந்த பகுதியில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது இந்த கோட்டலாம்பாக்கம் என்ற கிராமம். இன்று பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத் தலைவர் அதிகாரிகள் முன்னிலையில் கிராம சபை கூட்டம் கிராம மக்களும் பங்கேற்றுகின்றனர்.


அப்பொழுது பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ஜெய்சங்கர் என்பவர் கிராமத்தின் கணக்கு வழக்குகள் குறித்து கேட்டு கொண்டிருந்தார். அப்பொழுது பஞ்சாயத்து துணை தலைவர் வசந்தி அவருடைய கணவர் வீரமணிக்கும், ஜெய சந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் மோதலில் முடிந்தது.


இதனால் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டார்கள். இந்த மோதலில் பஞ்சாயத்து துணை தலைவரின் கணவர் வீரமணி காயமடைந்தார்.தனால் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மற்றும் பெண்கள் பயந்து ஓடி இருக்கிறார்கள். இதனால் கூட்டமானது பாதிலேயே ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் மோதல் சம்பவம் குறித்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Input & Image courtesy: Nakkheeran News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News