Kathir News
Begin typing your search above and press return to search.

கஞ்சா கடத்தும் நபர்களுடன் ஜாலி பிரியாணி விருந்து சாப்பிட்ட நாகை இன்ஸ்பெக்டர்

கஞ்சா கடத்தும் நபர்களுடன் ஜாலி பிரியாணி விருந்து சாப்பிட்ட நாகை இன்ஸ்பெக்டர்
X

ThangaveluBy : Thangavelu

  |  25 April 2022 1:04 PM GMT

ஆந்திரா மாநிலத்தில் இருந்து கடத்தப்பட்ட கஞ்சாவை நாகைப்பட்டினம் வழியாக படகு மூலம் இலங்கைக்கு அனுப்ப இருந்த கஞ்சாவின் மதிப்பு சுமார் ஒரு கோடி இருக்கும். இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். நாகையில் போதைப் பொருட்களின் விற்பனையை தடுப்பதற்காக எஸ்.பி., ஜவஹர் உத்தரவின்பேரில் சப்&இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இதற்கிடையில் தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி மோகன் 37, என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 2 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும் இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக சரவணன், ஜெகதீசன் மற்றும் சிலம்பு செல்வன், நிவாஸ் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது நாகை நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து அனைவரையும் கைது செய்தார். இதனிடையே, கஞ்சா கடத்தல் தனிப்படை போலீசார் கைது செய்த குற்றவாளிகளுடன் நகையில் உள்ள ஒரு ஓட்டலில் போலீஸ் சீருடையில் பிரியாணி சாப்பிடும் புகைப்படம் சமீபத்தில் வளைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி., விசாரணை நடத்தினார். இதன் அடிப்படையில் தஞ்சை சரக டிஐஜி கயல்விழி, இன்ஸ்பெக்டர் பெரியசாமியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார். கஞ்சா கடத்தும் நபர்களிடம் பிரியாணி சாப்பிட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சம்பவம் நாகை மாவட்ட போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News