பிரதமர் வருகை விழாக்கோலம் பூண்ட மதுரை: 2,314 மாணவிகள், மாணவிகளுக்கு பட்டம் வழங்குகிறார்!
பிரதமர் மோடி இன்று திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக பட்ட மரத்து விழாவில் பங்கேற்று 2,314 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்குகிறார்.
By : Bharathi Latha
திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் அமைந்துள்ள காந்த கிராம கிராமிய பல்கலைக்கழகம் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காதி கிராம நிறுவனத்தின் பவள விழா இன்று மாலை 3 மணிக்கு பல்கலைக்கழக பல்நோக்கு அரங்கத்தில் நடைபெறுகிறது. இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்குகிறார். குறிப்பாக சுமார் 2314 பேருக்கு பட்டம் வழங்கி பேசுகிறார். இதில் இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்துவான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கும் பிரதமர் கௌரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2 ஆண்டுகளாக காந்த கிராமிய பல்கலைக்கழகத்தில் பட்டம் அளிப்பு விழா நடைபெறவில்லை. இந்த நிலையில் 36வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் 2018 19 மற்றும் 2019-2020 ஆகிய ஆண்டுகளில் இளங்கலை பட்டம் முதல் முனைவர் பட்டம் வரை படித்த 2314 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்படுகிறது.
மேலும் பல்வேறு பாடங்களில் முதலிடம் பிடித்த 115 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. விழா மேடையில் இளங்கலை படிப்பில் ஒரு மாணவி மற்றும் ஒரு மாணவர், முதுகலை படிப்பில் ஒரு மாணவி மற்றும் ஒரு மாணவர் எனது இடம் மொத்தம் 4 பேருக்கு மட்டும் பிரதமர் மோடி பட்டம் வழங்குகிறார். இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார் மற்றும் மாணவர்களுக்கு துறைவாரியாக பட்டங்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
Input & Image courtesy: News