ஆன்மீக கலாச்சாரம் அழிக்கப்பட்டு வருகிறது - ஆளுநர் ஆர்.என் ரவி
நம் நாட்டில் உண்மையான வரலாற்றை அறிந்து ஆன்மீக கலாச்சாரத்தை இழிவுபடுத்தும் சூழ்நிலை உருவாகி இருப்பதாக தமிழக கவர்னர் உரை.
By : Bharathi Latha
நேற்று கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்து தினத்தை கொண்டாடும் விதமாக பாரதி இதிகாச சங்கலன் சமிதியின் தமிழக கலை சார்பில் கன்னியாகுமாரி தின விழா நாகர்கோயில் அருகே உள்ள இறகு குளத்தில் நேற்று நடந்தது. இதில் தமிழக கவர்னர் ரவி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன் பிறகு உரையாற்றிய அவர் கூறுகையில், சென்னை மாகாணத்துடன் இணைத்ததால் குமரி மாவட்டத்திற்கு இன்று மகிழ்ச்சியான நாள்.
பல போராட்டங்களுக்குப் பிறகு சென்னை மாகாணத்துடன் குமரி மாவட்டம் இணைக்கப்பட்டது. சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவை ஒருங்கிணைக்க பாடுபட்டார். இந்த மாவட்டம் தமிழகப் பகுதியுடன் இணைய தனது முன்னோர்கள் பட்ட துயரங்கள், இன்னல்களை நாம் இன்று மறந்து விட்டோம். குமரி மாவட்டம் ஒரு புண்ணியமான பூமியாகும் ஆதிபராசக்தி தேவி கன்னியாகுமரியில் எழுந்தருளி மக்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.
மேற்கூறிய வரலாறு ஆய்வாளர்கள் நம் நாட்டின் உண்மையான வரலாற்றை அழித்துவிட்டு மேற்கத்திய கண்ணோடு கண்ணோட்டத்துடன் கூடிய வரலாற்றை எழுதி இருக்கிறார்கள். நம் நாட்டின் ஆன்மீகத்தை அளிக்கும் வகையிலும் கலாச்சாரத்தை இழிவுபடுத்தும் வகையிலும் வரலாற்றை எழுதி இருக்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல. பாரதம் என்றால் ஆன்மீக கலாச்சாரம் நிறைந்த பன்முகத் தன்மை கொண்ட நாடு. அதை புரிந்து கொள்ள இன்னும் நிறைய நாம் கற்றுக் கொள்ள வேண்டும். தவறான வரலாற்று கண்ணோட்டத்துடன் வழி நடப்பவர்கள் இன்னும் உள்ளனர். அதற்கு இது போன்ற அமைப்புகள் முன்வந்து விழிப்புணர்வு கருத்தரங்களை நடத்த வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: Vikatan News